அலகிட்டு வாய்பாடு

அசை பிரிக்கும் முறைகள் :

நேரசை

1 . தனிக்குறில் – க
2 . தனிக்குறில் ஒற்று – கல்
3 . தனிநெடில் – கா
4 . தனி நெடில் ஒற்று -கால்

நிரையசை

5 . இரு குறில் – கட
6 . இரு குறில் ஒற்று – கடல்
7 . குறில் நெடில் இணைந்து – விழா
8 . குறில் நெடில் இணைந்த ஒற்று – விழார்

வாய்பாடு
ஓரசைச்சீர் : ஈற்றில் வருவது

1 .நேர் – நாள்
2 .நிரை – மலர்
3 .நேர்பு ( நேர் – நேர் ) – காசு
4 .நிரைபு ( நிரை – நேர் ) – பிறப்பு

ஈரசைச்சீர் :

1 .நேர் – நேர் – தேமா
2 . நிரை – நேர் – புளிமா
3 .நிரை – நிரை – கருவிளம்
4 .நேர்- நிரை – கூவிளம்

மூவசைச்சீர்

காய்ச்சீர்
1 . நேர்- நேர் – நேர் – தேமாங்காய்
2 . நிரை – நேர் -நேர் – புளிமாங்காய்
3. நிரை – நிரை – நேர் – கருவிளங்காய்
4 . நேர் – நிரை – நேர் – கூவிளங்காய்

இதனைப் பயன்படுத்தி நாம் எளிய முறையில் அலகிடலாம் .

எளிய முறையில் அலகிடுதல் –

வ . எண் சீர்  அசை  வாய்பாடு
1 எப்|பொருள் நேர்-நிரை கூவிளம்
2 எத்|தன்|மைத் நேர்-நேர்-நேர் தேமாங்காய்
3 தா|யினும் நேர்-நிரை கூவிளம்
4 அப்|பொருள் நேர்-நிரை கூவிளம்
5 மெய்ப்|பொருள் நேர்-நிரை கூவிளம்
6 காண்| நேர்-நேர் தேமா
7 தறி|வு நிரைபு பிறப்பு

சீர் பிரிக்கும் முறை :

1.முதலில் மெய்யெழுத்துகளைப் | பிரிக்கவும் .
2.மெய்யெழுத்தோடு 1 எழுத்து இருந்தால் (குறில் அல்லது நெடில்) அப்படியே விடவும் .
3.மெய்யெழுத்தோடு 2 எழுத்து இருப்பின் குறில் எனில் விட்டுவிடவும்.
நெடில் |எனில் பிரிக்கவும் .
4.மெய்யெழுத்து இல்லாமல் 2 ,3 எழுத்து இருப்பின் இருகுறில் | பிரிக்கவும் . குறி்ல் நெடில் இணைத்து,| பிரிக்கவும்.

குறில் எழுத்து- நெடில் எழுத்து அறிதல் –

1.அ,இ,உ,எ,ஒ-இந்த வரிசை எழுத்துகள் குறில் எழுத்துகள் .
2.ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ-நெடில்அதாவது (தா,தீ,தூ,தே,தோ,தௌ)இது போன்ற துணை எழுத்துகள் உடையவை நெடில் எழுத்துகள் ஆகும் .

அசை பிரித்த பின்னர் எழுத்துகளுக்கு(குறில்,நெடில்) எண்கள் இடுக.
குறில்-1
நெடில் -1
மெய்யெழுத்து -0

அசை எழுதுதல் :
1 ,10 -நேர்
11,110 -நிரை -இவற்றைப் பயன்படுத்தி எழுதலாம் .

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் .
-இக்குறட்பாவினை அலகிடுக .

வ.எண்
சீ்ர்
அசை
வாய்பாடு
1
  11 |  110|     10
அரி|யவற்|றுள்
நேர்-நேர்-நேர்
தேமாங்காய்
2
10 |  10
எல்|லாம்
நேர்-நேர்
தேமா
3
  11  |1
அரி|தே
நிரை-நேர்
புளிமா
4
  1 1  | 1   | 10
பெரி|யா|ரைப்
நிரை-நேர்-நேர்
புளிமாங்காய்
5
  1 | 10
பே|ணித்
நேர்-நேர்
தேமா
6
  11 | 10
 தம|ராக்
நிரை-நேர்
புளிமா
7
   1   1 0
கொளல்
நிரை
மலர்