Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

papaya fruit

வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சுவையான, மலிவான பப்பாளி பழம் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இந்த பழத்தில் விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ உயிர் சத்து இதில் நிறைய இருக்கிறது. பப்பாளி பழத்தில் மட்டுமின்றி, இவற்றின் காய், இலை, விதை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்து இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க கூடிய பப்பாளியின் மருத்துவ பயன்களை பற்றிப் பார்ப்போம். பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். பப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்யை குணப்படுத்தும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி துரிதமாக்கும் பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.மேலும் இது எலும்பு வளர்ச்சி மற்றும் பல்லை உறுதியாக்கும். பப்பாளி காயை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும். பிரசவித்த பெண்கள் உணவில் பப்பாளிக் காய் குழம்பை சேர்த்து கொண்டால், தாய்ப்பால் சுரப்பு…

Read More

புதினா (மிளகுக்கீரை) ஒரு மருத்துவம் நிறைந்த மூலிகை தாவரமாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவையும் நம்முடைய அன்றாட உணவில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். இதன் வாசனைக்காக பிரியாணி போன்ற சமையலில் பயன்படுத்துகிறோம். இது மட்டுமல்லாமல் வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மென்றால், வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்காக தான் சுவீங்கம், மெந்தோ ஃபிரஸ், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட புதினா பயன்படுத்த படுகின்றனர். மேலும் இதிலுள்ள மருத்துவ குணங்களை நீங்கள் தெரிந்துகொண்டால், அன்றாட உணவில் இதை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள். புதினாவின் மருத்துவ குணங்களை பற்றிப் பார்ப்போம். புதினாவில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கும். புதினாக் கீரையில் சட்னி செய்து சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு அருந்தலாம். புதினாவை எப்படி பயன்படுத்தினாலும் அதன் மருத்துவ குணம்…

Read More

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்னர் வரும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது, உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தற்போது பல உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பிறகு வரும் உடல்நலப் பிரச்சனைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் இந்நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் உடல்நல பிரச்சனைகள்…

Read More

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 9 ஆம்தேதியில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின்‌ ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க…

Read More

தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்த பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமிக்கப்பட்டதை அடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் “பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்” என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்ற பெயரிலிருந்து ஐயர் என்பதை நிக்கி உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் எனவும், நாமக்கல் கவிஞர்…

Read More

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெலப்ஸ், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் போன்ற உலகின் தலை சிறந்த வீரர்கள் பலரும் தங்கள் பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்ற புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம். அந்த காலங்களில், பணப்பறிமாற்றத்திற்கு பதிலாக தங்கத்தை பறிமாற்றம் செய்வது வழக்கமாக வைத்து கொண்டு உள்ளார்கள். இதனால் தங்கக் காசின் உண்மைத்தன்மையை அறிய வியாபாரிகள் அதை கடித்துப் பார்த்து சோதிப்பார்கலாம். தங்கம் ஒரு மிருதுவான உலோகம் என்பதால் அதனை லேசாக கடித்தால் கூட தடம் பதிந்துவிடும். அதற்காக, ஒலிம்பிக் சாம்பியன்களும் தங்களுக்கு அளித்த பதக்கத்தின் உண்மைத்தன்மையை அறிய இப்படி கடிக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் புகைப்படத்திற்காகத்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்பது தான் உண்மை. 1912-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெல்லும் வீரர்களுக்கு சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட…

Read More

வெங்காயம் மற்றும் பூண்டின் பயன்பாடு சமையலறையில் இன்றியமையாதது. நம் அன்றாட உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டு உணவு பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைத்து உள்ளது. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. மேலும் பூண்டு, ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்பர் கலவைகளை கொண்டுள்ளது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நாம் அன்றாட உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தில் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 20 பூண்டு – 20 (பல் பூண்டு) புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு தக்காளி – 1…

Read More

ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 1 முதல்) அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ஒரு மாதத்தில் மூன்று முறை கட்டணமில்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்க்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ஆக உயர்கிறது. அதேப்போல் பணம் அல்லாத மற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது அது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனை கட்டணம் அனைத்து வங்கிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.…

Read More

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தவறாமல் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். இவர்கள்…

Read More

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்திருக்கிறார். இவருக்கு அடுத்து குத்துச் சண்டை போட்டியில் லாவ்லினா இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெள்ளி பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஒலிம்பிக்கின் வட்டு எறிதல் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த குரேஷிய வீராங்கனை 63.75 சராசரி தான் பெற்று இருக்கிறார். ஆனால், வட்டு எறிதல் குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 64 சராசரி பெற்று இருக்கிறார். இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டியிலும் இதே அளவில், அதாவது 64 சராசரியுடன் வட்டு…

Read More

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், கொரோனா சூழலால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 % கல்விக் கட்டணம் செலுத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலால் வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை குறித்து பள்ளிகளில் முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. RTE சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கட்டணம்…

Read More

இந்தியாவில் நண்பர்கள் தினம் (2021 இனிய நண்பர்கள் தினம் ) 2021 ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படும். கோவிட் -19 அச்சுறுத்தலுக்கு இடையே வெளியே சென்று நட்பு தினத்தை கொண்டாடுவது சவாலானதாக தான் இருக்கும். நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2021ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியிலே முதல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆதனால் நண்பர்கள் இத்தினத்தை வரவேற்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பொதுவாக நண்பர்கள் மற்றொரு குடும்பத்தைப் போன்றவர்கள் என்று கூறலாம், அதனால்தான் இது இந்தியாவிலும் உலகெங்கிலும் பகிரங்கமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச நண்பர்கள் தினம் 2021 ஜூலை 30 அன்று அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவது ஒரு பாரம்பரியமாகும். நண்பர்கள் தினம் எப்போது…

Read More

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளின் பக்கம் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் சில மாதங்கள் பள்ளிகளுக்கு சென்றனர். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த கல்வி ஆண்டு…

Read More

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த காய் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. புடலங்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று புடலங்காயும் நாட்டுக்காய் வகையை சார்ந்தது. புடலங்காய் கூட்டு, புடலங்காய் வேர்க்கடலை சேர்த்த பொரியல், புடலங்காய் தொக்கு என பல வகை டிஷ்கள் செய்து சாப்பிடலாம். நாய்ப்புடலை, கொத்துப்புடலை, பன்றி புடலை, பேய்ப்புடலை என பல வகை புடலங்காய்கள் இருந்தாலும், பலரும் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதில்லை. இவர்கள் புடலங்காயை மறந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். புடலங்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதைப் பற்றிப் பார்ப்போம். புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாகும். அஜீரண கோளாறு பிரச்சனை…

Read More