ஹைலைட்ஸ்: உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். அதிலும் மாங்காயுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மாங்காய் சாப்பிட்டால் சூடு என்பார்கள். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. நாம் இப்போது மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருக்கும். மாங்காயில் கலோரிகள் இல்லை. எடையை குறைக்க விரும்புவோர் அச்சமின்றி மாங்காயை சாப்பிடலாம். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடலாம். மாங்காய் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் மிகுந்த சோர்வும், வாந்தியும் ஏற்படும்.…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும். நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் நாம் அனைவருக்கும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவது மிகவும் நல்லது. ஒருவர் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவர்களுடைய இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். நாம் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன. இந்தவகையில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதால் நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி கலோரிகள் எரிக்க உதவுகிறது. நாம் உடலின்…
ஹைலைட்ஸ்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் குறித்து அதிமுகவினர் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கடந்த 7 ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் இக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு…
ஹைலைட்ஸ்: புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத்தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சுற்றுலா துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2019-ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் இறையன்பு. இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், இரண்டாவது செயலாளராக விருதுநகர்…
ஹைலைட்ஸ்: கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000. சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப்பயணம். ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது. பதவியேற்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சருக்கான இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்தார். தலைமை அலுவலகத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 1. கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ .4000 வழங்கப்படும். முதல் கட்டமாக இம்மாதமே ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 2. ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. இது வரும் மே 16 ஆம் தேதி அமுலுக்கு வருகிறது. 3. சாதாரண…
ஹைலைட்ஸ்: கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சம். இந்தியாவில் தொடர்ந்து ஒரு 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 930 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கிடையே அச்சம் அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்டது. இந்நிலையில் தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கடந்த ஒரு வாரத்தில் உலக கொரோனா பாதிப்பில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 46% ஆக பதிவாகியுள்ளது. உலக அளவு கொரோனா உயிரிழப்பில் இந்தியாவின் உயிரிழப்பு 25% ஆக பதிவாகியுள்ளது. இன்று…
ஹைலைட்ஸ்: சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு. மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் சார்பில் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய ஆளுநரிடம் உரிமை கோரினார். மு.க. ஸ்டாலின் இன்று (மே 5)காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி உரிமை கோரினார். இதை தொடர்ந்து தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராம் பட்டேல் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் வரும்…
ஹைலைட்ஸ்: கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் போனது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் வரை இணையவழித் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும். அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தவிர, பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பர் மாதங்களில் நடத்த…
ஹைலைட்ஸ்: சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செல்ப் சிடி-ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுப்பதால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலரும் சிடி ஸ்கேன் எடுத்துள்ளார்கள். இந்நிலையில் குலேரியாவின் கருத்து அச்சத்தை ஏற்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொல்ல முடியாது என்கிறார் அமர்நாத். மேலும் புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பு எவ்வளவு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது என்கிறார் அமர்நாத். பொதுவாக குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடனே தீவிரமான சிகிச்சை…
ஹைலைட்ஸ்: உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை நாடு முழுவதும் ஊரடங்கு,வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை. இளைஞர்களுக்கு மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் மாரடைப்பு. உலகளவில் கொரோனா நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை. 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான (COVID 19) இந்த நோய் தொற்றினால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கின் தொடக்கத்தில் பலருக்கும் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்தது. இது அனைவருக்கும் விடுமுறை காலம் போன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மாதக்கணக்கில் ஊரடங்கு நீடித்ததால் வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை போன்றவைகள் உருவானதும் பலரும் கடுமையான மனஅழுத்தத்திற்குஆளாகினார்கள். அது ஒரு சில மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம்,…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்க்கு “மிஷன் ஆக்சிஜன் ” என்ற நிறுவனம் அறிமுகம். மிஷன் ஆக்சிஜன் நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நிதியுதவி தொற்றுநோயை எதிர்த்து நிற்க கடுமையான போராட்டமும் உழைப்பும் தேவை. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்சிஜன்” என்ற நிறுவனம் உதவி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரும் சுகாதார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதன் விளைவாக “மிஷன் ஆக்சிஜன்” என்னும் நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடி வரும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த சூழலில், மிஷன் ஆக்ஸிஜன் திட்டமானது, 250-க்கும் அதிகமான இளம் தொழில்முனைவோர் குழு, ஆக்சிஜன்…
ஹைலைட்ஸ்: தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பம். 2021 டி.என்.பி.எல். ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியீடு. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது ஐந்தாவது சீசனாக ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை என நான்கு நகரங்களில் நடைபெற இருக்கிறது. டி.என்.பி.எல்.போட்டியானது தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016 ம் துவங்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டி.என்.பி.எல். போட்டியை இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில் கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக ஐந்தாவது சீசன் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியை…
ஹைலைட்ஸ்: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம். தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, அறிவியல் தொழில்நுட்பங்களை மதிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நடிகர் விவேகிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமணையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசியை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் நடிகர் விவேக்கைப் பார்க்க வந்து மருத்துவமனை வாசலில் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்த…
ஹைலைட்ஸ்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக 3,79,257 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 15 கோடி பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மக்களை ஆட்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தடுக்ககவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் ஆகியவற்றின் நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…
