கனரா வங்கி BE/B.TECH முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாத வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி – Chief Digital Officer காலியிடங்கள் -1 வயது வரம்பு – 30 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.06.2021 கல்வி தகுதி – B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அனுபவம் – BFSI sector பணிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் வரையாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை – Group Discussion and/or Interview தேர்வு கட்டணம் – S C/ST/PWBD/Women விண்ணப்பதாரர்கள் ரூ .118 செலுத்த வேண்டும். பொது பிரிவினர் ரூ. 1180 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி THE CHIEF GENERAL MANAGER CANARA BANK Recruitment Cell…
Author: Pradeepa
சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைத்து பூப்படைந்து விடுகிறார்கள். இது பெண்களை சட்டென்று முடக்கிவிடுகிறது. பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தையும், வலிகளையும் அடைகின்றனர். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாமதம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை. இளம்வயதிலேயே பூப்படைந்த பெண்களுக்கு தாமதமான மாதவிடாய் காலம் ஏற்படுவது இயல்பான ஒன்றே. அனால் 20 அல்லது 25 வயது பெண்களுக்கு வழக்கமான இடைவெளியில் மாதவிடாய் அடைதல் தள்ளிப்போகிறது. இதில் ஒரு சிலர் தங்களின் மாதவிடாயினை விரைவில் கொண்டுவரவும் செய்கின்றனர். இது போன்ற சுழற்சியை முன்னதாகவே தனது மாதவிடாய் காலத்தை முடித்துக் கொள்கின்றனர். பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்டிருகிறார்கள் என்றால் அதற்கு நம் உணவிலும் உடலிலும் பல காரணங்கள் உள்ளன. அதற்கு பெண்கள் ஆரோகியமான முறையான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். தாமதமான…
டவ் தேவ் புயல் போன்று மற்ற புயல்கள் தமிழகத்தை தாக்கி விவசாயத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை காலங்களில் மட்டுமல்லாமல் மழையின்றி வறட்சி காலத்திலும் விவசாயிகள் பெரும் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் பெருபாலான இடத்தில் வாழைகள், முட்டைக்கோஸ்கள் போன்ற விவசாயம் அழிந்து வருகின்றது. விவசாயிகள் இதுபோன்ற அழிவுகளை சந்தித்தால் அவர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு தொலைபேசி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெறுவதற்கு 044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் உதவிகளை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக வேளாண்துறையானது மாநில அளவில் 044 – 22253884 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்ட உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றிடவும், மேலும் மாவட்ட வாரியாக தொலைபேசி எண்களும் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக மாவட்ட அளவில் விவசாய பொருட்களை விற்பனை, சேமித்தல் போன்றவற்றுக்கு இதன்…
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின்சார ரீடிங்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நுகர்வோர் செலுத்திய மின் கட்டண தொகையையே இந்த மே மாதமும் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் மின் கட்டணம் கூடுதலாகவோ அல்லது குறைவாக இருந்தால் மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மக்கள் தங்களுடைய மின்சார ரீடிங்கை பார்த்து சுய மதிப்பீடு செய்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் மின்சார வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். புகைப்படம் அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாட்ஸ்ஆப் மூலம் புகைப்படம் அனுப்புவோர் தங்களுடைய மின் கட்டணத்தை இணையதளத்தின்…
கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வரும் நிலையில் மேலும் ஊரடங்கு அமல்படுத்த மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வரம் வரை முழு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதல் ஆலோசனை கூட்டம் கடந்த 13 ஆம் தேதி தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலைமைச்சர் தலைமையில் நடைபெற்றது. நாளை(மே 22 ஆம் தேதி)…
மேற்கு ரயில்வே Apprentice வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Fitter, Carpenter உட்பட பல்வேறு பிரிவிகளின் கீழ் Apprentices பணிக்கான காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் தகவல்களை https://www.rrc-wr.com/ என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பணி – Apprentice காலியிடங்கள் – 3591 கடைசி தேதி – 25.05.2021-24.06.2021 விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வயது வரம் – 15 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு /12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் ரயில்வே பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை – விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். விண்ணப்பக் கட்டணம் SC/ ST/ PWD/ பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.…
19 ஆம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவியை மகாராஷ்டிரம் மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த பரிசோதனை கருவின் விலை ரூ. 250. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து கொரோனா தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையை எல்லோரும் செய்ய கூடாது. பரிசோதனை செய்த 15 நிமிடத்தில் தொற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் இருந்தவர்கள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியின் மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே…
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுயோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையவில்லை. பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதின் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தாமதம் ஆனது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து 10,62,000 டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது.…
வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் கூறியுள்ளார்.
இந்தியாவில் மிக பெரிய பொது துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் SBI உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றன. இதுகுறித்து SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளது. டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் போது நிறைய மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் பல புதிய ஆப்களில் இருந்து தற்காத்துக் கொள்வது முக்கியமானதாக உள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய முக்கிய விவரங்களான பிறந்த தேதி, ATM கார்டு நம்பர், CVV, userid/password, OTP ஆகியவற்றை…
கொரோனா நோய் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலபடுத்தியும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக உயர்ந்துள்ளது. மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 16,64,350 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் 364 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ள நிலையில் மொத்த உயிர் இழப்பு எண்ணிக்கை 18,329 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 24 ஆம் தேதி வரை உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாகியுள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 10.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலவர் ஸ்டாலின் கொரோனா பரவல் குறித்து சேலம், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…
தமிழகத்தில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் உயிர் இழந்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் சிலர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது, நோயாளிகளை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது, தேவைபபடுவோருக்கு மருந்துகள் வாங்கி கொடுப்பது இது போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5.00 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் 27 தொண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை…
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநில முதல்வர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்வது, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற நட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை போக்க அரிசி குடும்ப அட்டை வைத்து உள்ளவர்களுக்கு கலைஞர் பிறந்த நாள் முதல் ரூ. 4000/- வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்து உள்ளது. ரூ.4153.39 கோடி செலவில், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 2,07,66,950 எண்ணிக்கையிலான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து உள்ளனர். கடந்த 3 மாதங்களில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 2,14,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். 2,14,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும முதல் தவணையாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் 2 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்…
