கூகுள் பே என்னும் ஆப் ஐ பயன்படுத்தி மக்கள் தங்களின் பணத்தை தேவை என்பவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். கூகுள் பே ஆப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் என்று தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்ய கூகுள் பே நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் போன்ற ஒரு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்துமே இனி இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம் என்ற வசதி விரைவில் கொண்டுவர உள்ளது. வெஸ்டர்ன் யூனியன் அல்லது வேஸ் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம் என்றும் இதில் ஒரு சிறிய தொகை கட்டணமாக பணம் அனுப்புபவர்களிடமிருந்து மட்டும் பெறப்படும் என்றும் முழு தொகையானது பணம் பெறுபவர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு அமெரிக்கா மற்றும்…
Author: Pradeepa
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு தரிப்பில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள நிலவரப்படி 18 வயதிற்கு மேல் உள்ள 17.72 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள செய்தி குறிப்பில் 2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி…
கொரோனா வைரஸானது கடத்த மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை தமிழகத்தை ஆட்டிப்படைத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்காலத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடத்த வருடத்தின் இறுதியில் கொரோனா தொற்றானது குறைத்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. மீண்டும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வந்ததும் பள்ளிகள் மூடப்பட்டு இணையதளத்தின் வாயிலாக வகுப்புகள் நடத்திவந்தன. இந்த கல்வி ஆண்டுக்கான மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கவேண்டும். புதிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேதி மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போடப்பாடுமே தவிர ரத்து செய்யப்படாது…
தமிழகத்தில் காற்றை போல பரவி வரும் கொரோனா வைரஸ் காரணத்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸை கட்டப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரை பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் பல்வேறு தளவர்களுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இந்த ஊரடகானது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் காய்கறி கடைகள், பூ கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதை போன்று, அதே நிபந்தனைகளுடன் பழக்கடை வியாபாரமும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது போன்று, அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது. தமிழக அரசானது ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளில் உள்ள பணிகளை பராமரிக்க குறைந்த அளவிலான பணியாளர்களுடன் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது என்று தளர்வுகள் குறித்த…
கோடை காலம் மட்டும் இன்றி அனைத்து காலத்துக்கும் ஏற்ற பானமாக இளநீர் இருந்துவருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடித்து வருகின்றனர். இளநீரானது இயற்கையில் கிடைக்கப்பெறும் ஆரோகிய பானைகளில் ஒன்று. தென்னை தோப்பிற்கே சென்று மரத்தின் நிழலில் இளநீரை குடிப்பது என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரும். இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்த பானத்தை பருகினால் வெயிலின் தாக்கத்திலிருந்து மீளலாம். இந்த நீரானது உடலுக்கு பல நன்மையை தரவல்லது. இளநீரில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி கிழே காண்போம். வயிற்றுப்போக்கு: வயிற்றுக் போக்கு அதிக அளவில் நிகழும் போது உடலில் நீரின் அளவில் குறையும். அதிகப்படியான நீர் வெளியேற்றம் காரணமாக உடல் சோர்வுடன் காணப்படும். இந்த நேரத்தில் இளநீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட்…
ஹைலைட்ஸ் : பி1617 உருமாறிய வைரஸின் பாதிப்புதான் இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ காரணம். வைரஸின் அதிதீவிர பரவலால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றன. ஒட்டுமொத்த உலக மக்களையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறிவிடும் என்றும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை. கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய மக்களை வாட்டிவதைத்து கொண்டிருக்கும் இந்த வைரஸ் கடத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை தாக்க தொடங்கியது. வைரஸின் அதிதீவிர பரவலால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை பின்பற்றியும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் இன்று இரண்டாம் அலைக்கு தள்ளப்பட்டு இதனால் பெரும் பேரழிவை சந்தித்து வருகிறோம். கோவாக்சின்,கோவிஷீல்டு போன்ற தடுப்பு ஊசிகளை செலுத்தியும் இந்த கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாள்தோறும் வைரஸின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. வருகின்ற காலங்களில்…
அண்ணா பல்கலைக்கழகம் JRF, Project Associate போன்ற பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை annauniv.edu இல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 24.5.2021. நிறுவனம் – அண்ணா பல்கலைக்கழகம் பதவி – JRF, Project Associate காலியிடங்கள் – 21 மாத வருமானம் – Rs.30000 பணி இடம் – சென்னை பணி காலியிடங்கள் Junior Research Fellow 1 Analyst …
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று(மே 11ஆம் தேதி) நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று கொண்டனர். சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின் படி சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு அப்பாவும், துணை தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தலில் இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டிகள் எதுவும் இன்றி சட்டபேரவை தலைவராக அப்பாவு, சட்டப்பேரவையின் துணை தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார். இன்று சபாநாயகர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தமிழக…
கொரோனா வைரஸ் பரவல் வருவதால் தமிழக்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஆட்டோ,பேருந்து, வாடகை டாக்சி போன்றவை செயல்பட தடை என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் 100% முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அமைச்சரவை கூட்டத்தில் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனை பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் தூய்மை நிறைத்த தரமான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை 24 மணி நேரமும் கிடைக்க செய்வதை உறுதி படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.. இந்த சேவையின் மூலம் ஊரடங்கு காலத்தில் நோயாளிகளுக்கும், நோயாளிகளை பார்க்கவருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்படுவதை தவிர்க்க முடியும். இந்த சேவையானது அனைவரும் வரவேற்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் மற்றும் பிற வேலை பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை www.mhc.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 2021 ஜூன் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பணிக்கான காலியிட விவரங்கள் காலி இடங்கள் – 3557 கல்வி தகுதி – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மாத வருமானம் – Rs.15,700- 50,000 பணி இடங்கள் – அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் (மயிலாடுத்துரை மாவட்டம் உட்பட), பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரிஸ், திருநெல்வேலி (தென்காசுல் மாவட்டம், திருவனையுருமுர்) கடலூர், திண்டிகுல், காஞ்சீபுரம் (செங்கல்பட்டு மாவட்டம் உட்பட), கரூர், மதுரை, நமக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி,…
ஹைலைட்ஸ் : மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அணுகலாம். மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும். தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் சுமார் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து, மருந்து விநியோகிக்கும் சேவையை ஆரபித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவை மற்றும் முகவரியை பதிவு செய்தால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் வழங்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம்…
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மே 10 ஆம் தேதி 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்படும் இடையூறு காரணமாக தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் எந்தவொரு தாமதமான கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மே 31 வரை மீன் இணைப்பு சேவைகளைத் துண்டிக்க வேண்டாம் என்று tangedco ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ் : தற்காலிக சட்டசபை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எதிர்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக கட்சி அதிக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். நேற்று(மே 10ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் 24 ஆம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு செல்வோருக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் விநியோகம் போன்ற பணிகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய துறைகளில் குறைத்த பணியாளர்கள் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களுடைய பணிகளுக்கு வந்து செல்ல தமிழக அரசு சென்னையில் உள்ள முகிய வழித்தடங்களில் 200 பேருந்துகளை இயக்க முடிவு செய்து உள்ளது. பயணம் செய்யும் போது அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளான…
