பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ எனப்படும் ‘தேர்வுகள் பிரச்சனை அல்ல’ என்ற தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இந்த ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் ‘ஆன்லைன்’ வாயிலாக இன்று(ஏப்ரல் 07) நடைபெற உள்ளது. பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 14 லட்சம் பேர் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி இன்று இரவு 7:00 மணிக்கு நடைபெறும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பொது தேர்வுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக ‘பரிக் ஷா பே சர்ச்சா’ கலந்து உரையாடல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உங்களை நேரில் சந்தித்து உரையாட ஆவலாக இருக்கிறேன்.…
Author: Pradeepa
வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்குவதன் காரணமாக சாலை விபத்து நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் டிரைவரை எழுப்பும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி ஒலி எழுப்பும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும்போது ஓட்டுபவர் கண்கள் மூடினால் ஒலியை எழுப்பி, அவரை விழிப்படையச்செய்யும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளோம். வாகனம் ஓட்டுபவரின் இருக்கைக்கு அருகே, அவரது கண்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். வாகனம் ஓட்டுபவர் கண்களை மூடும் போது கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட ‘ஐ ட்ராக்கர்’ எனப்படும் கருவி ஒலி எழுப்பி டிரைவரை விழிப்படையச் செய்யும். எல்லா நேரங்களிலும்(பகல் இரவு) இந்த கருவி செயல்படும் என்று கல்லுாரியின் செய்தி தொடர்பாளர் கூறினார். இக்கருவியை, தெலுங்கானா மாநில வர்த்தகத்துறை முதன்மை செயலரிடம் தகவல் தொழில்நுட்ப…
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வருவதால் முகக்கவசம் அணியுமாறு கூகுல் டூடுல்(google doodle) செவ்வாய்க்கிழமை மக்களை கேட்டுக்கொண்டது. COVID-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் முக முக்கியமான ஒன்று அனைவரும் முகக்கவசம் அணிவது. முகக்கவசம் அணிந்து உயிரைக் காப்பாற்றுங்கள். G-O-O-G-L-E எழுத்துக்கள் முகக்கவசம் அணிந்து உள்ளதாக காட்டப்பட்டுள்ளன. ‘எல்’ என்ற எழுத்தில் தடுப்பூசி சிரிஞ்சும் உள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க உதவுங்கள்” என்று கூகிள் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கூகுல் டூடுல் அறிமுகப்படுத்திய தொடரில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி தொழிலாளர்கள், விநியோக பங்காளிகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை அங்கீகரித்து கௌரவ படுத்தியுள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உலகமெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 131.6 மில்லியனை எட்டியுள்ளது, மேலும் இறப்புகள் எண்ணிக்கை 2.85 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்று கூறியுள்ளது. சிஸ்டம்ஸ்…
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 வரை இறப்பு ஏற்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவின் படி 5 பேருக்கு மேல் ஒன்றாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை முழு…
விஜய் டிவியின் சூப்பர் ஹகழ்ச்சியான சூப்பர் சிங்கர் கடந்தவாரம் சிறப்பாக ஒளிபரப்பான நிலையில், ஒருவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கடத்த 7 சீசன் வெற்றி பயணித்தை நோக்கி தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று கொண்டுவருகிறது. மக்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் திறமையான 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் மக்களிடமிருந்து குறைத்த வாக்குகளை பெற்று 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். அதேபோல் கடத்த வாரம் நடத்த போட்டியில் அரவிந்த், புரட்சி மணி இருவரும் எலிமினேஷன் சுற்றுக்கு தள்ளப்பட்டு, மக்களிடம் கருத்துக்களையும் வாக்குகளையும் பெற்றனர். அந்த நிலையில் சூப்பர் சிங்கர் 8 விட்டு வெளியேறும் நபரை அறிய ஆவலாக காத்திருந்த நிலையில், அரவிந்த் மற்றும் புரட்சிமணி இருவரில் ஒருவரை வெளியேற்றும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தனது திறமைகளை சிறப்பானமுறையில் வெளிப்படுத்திய புரட்சி மணி அவர்கள் கடத்த எபிசோடில் சரியான முறையில் படாத…
# கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின் | # எஸ்.ஆர்.பிரபு | #ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் | #யாரையும் இவ்ளோ அழகா| # ஜெய்சுல்தான் பாடல்: யாரையும் இவ்ளோ அழகா இசை: விவேக் – மெர்வின் பாடியவர்: சிலம்பரசன் டி.ஆர், மெர்வின் சாலமன் பாடல்: விவேகா இசைக்கலைஞர் வரவு: பாடல் இயற்றியது, தயாரித்தது மற்றும் ஏற்பாடு செய்தது: விவேக் – மெர்வின் விசைப்பலகை மற்றும் சின்த்ஸ்: மெர்வின் சாலமன் ரிதம் தயாரித்தவர்: விவேக் சிவா குரல் செயலாக்கம்: அவினாஷ் சதீஷ் பாஸ் கிட்டார்: நேப்பியர் நவீன் உட்விண்ட்ஸ் மற்றும் பென்னி விசில்: நாதன் சரம் வாசித்தல்: எஸ்.எம்.சுபானி இணக்கம் ஏற்பாடு: மெர்வின் சாலமன் ரெக்கார்டிங் பொறியாளர்கள்: ஷெர்வின், ஜாபின் @ வி.எம். லாப்ஸ், சுஜீத் @ 2 பார்க்ஸ்டுடியோஸ், சித்தார்த் @ ஆரா ஸ்டுடியோஸ் இசை மேலாளர்: விக்னேஷ் சங்கரன் கலப்பு:…
கடத்த வாரம் 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு தேசிய விருது வழங்க அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அளிப்பதாக தெரிவித்தார். இந்திய சினிமாவில் வழங்கப்படும் உயரிய விருதான இதனை ரஜினி பெறுவது குறித்து அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய தகவல்(ம)ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்அறிவித்துள்ள 67-வது தேசிய விருது வழங்கும் விழா அடுத்த மாதம் மே-3 தேதி நடைபெறும் என்றும் அதே நாளில் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிக்கும் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாளில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் விருது வழங்குவது உறுதியாகியுள்ளது. உயரிய இரண்டு விருதுகளையும் ஒரே குடும்பத்தை சேர்த்த இருவர் வாங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது ரசிகர்களுக்கிடையியே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ‘மண்டேலா’ திரைப்படத்தையும் விஜய் டிவியில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். யோகி பாபு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். மலையாளத் திரைப்படமான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த திரைப்படத்தை ஆர். கண்ணன் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் பாடகி சின்மயின் கணவர். இந்நிலையில் யோகிபாபு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மலையாள இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’…
கொரோனா தொற்றின் 2 ஆம் அலை சூறைக்காற்றை போல் பரவிவரும் நிலையில் சில நெறிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது. பக்தர்கள் அதிக கூடும் இடமான வைகுண்டம் காத்திருப்பு அறைகள், ஏழுமலையான் கோவில், அன்னதான கூட்டம், முடிகாணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படவேண்டும். 22 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக திருப்பதியில் அளித்து வரும் சர்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனையை அன்னதானக்கூடம், வாடகை அறை அளிக்கும் இடம் உள்ளிடவற்றில் சோதனை செய்யப்படவுள்ளது. 2பேர் மட்டுமே வாடகை அறையில் அனுமதியளிக்கப்படவுள்ளது. சமூகஇடைவெளியை ஏழுமலையான் கோவில்,வைகுண்டம் காத்திருப்பு அறை,தரிசன வரிசைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும். வானொலியில் 5 மொழிகளியில் கொரோனபரவல் தடுப்பு விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. விரைவுதரிசன டோக்கன்கள் பெற்றவர்கள், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்றவர்கள் மதியம் 1மணிக்குமேல் திருமலைக்கு…
நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்த மோடி பசுமலை தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாக சார்பில் மாலை அணிவித்து கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையன வேட்டி சட்டையுடன் கோவில் வாசலில் பொதுமக்களுக்கு கையசைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று தரிசனத்தை பெற்றார். முதன்முறையாக மோடி மதுரைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு 11:10 மணிக்கு வருகைதந்தார் .பிரதமர் வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று தேர்தல் பிரசரபொதுகூடத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். பிரதமருடன் முதல்வர் இ.பி.எஸ்,துணை முதல்வர் ஓ.பி.எஸ் ,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தா.மாகா தலைவர் ,ஜி.கே வாசன் பாஜக தமிழக தலைவர் முருகன்(ம)கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரச்சாரபொதுக்கூட்டத்தில் தென்மாவட்டத்திலிருந்து…
2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைத் வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி களமிறங்கி 50 ஓவர்கள் முடிவில் 276/4 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தனே 103* (88) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இலக்கைத் அணியை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் விரேந்திர சேவாக் (0), சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்து கவுதம் கம்பீர், விராட் கோலி (35) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 83 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து கவுதம் கம்பீர், மகேந்திரசிங் தோனி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 109 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர். மகேந்திரசிங்…
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, நிறுவனங்கள் எந்த இடையூறுகளும் இன்றி, வங்கிகளில் குறிப்பிட்ட கடன் தொகையை வாங்கி கொள்ள முடியும். அவசர கால கடன் வழங்கும் நிறுவனங்கள் 12 பொதுத் துறை வங்கிகள் 24 தனியார் துறை வங்கிகள் 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்நிலையில், மத்திய அரசு இந்த அவசரகால திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயணம் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது . இந்த திட்டமானது 3 லட்சம் கோடி ரூபாய் கடன் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும்…
ஸ்டார் விஜய் டிவி-ல் மிகவும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி 2 போட்டியாளர்களுடன் இருவரும் ஜாலியாக தான் பயணம் செய்கிறார்கள். இருவரும் கோமாளிகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்வார்கள் அதில் செஃப் தாமு அவர்களின் லூட்டிக்கு இப்போது பஞ்சமே இல்லை என்று கூறலாம். கோமாளிகள் மற்றும் போட்டியாளர்களின் விவரங்களை இதுவரை நாம் பதிவு செய்தோம். இப்பொழுது முதன்முறையாக நடுவரான தாமு தனது மகள்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. செஃப் தாமு தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவரை சமையல் விடீயோக்களை மட்டுமே பதிவு செய்து கொண்டு இருந்தார். இம்முறை தனது மக்கள்களின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாவில் இதை பார்த்த ரசிகர்கள் செஃப் தாமு வின் மகள்களா இவர்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.11ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என்று சட்டமன்ற தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை வைத்து தனது வாக்குகை பதிவு செய்யலாம் 11 ஆவணங்கள் ஆதார் கார்டு பான் கார்டு வங்கி கணக்கு புத்தகம் அஞ்சலக கணக்கு புத்தகம் ஸ்மார்ட் கார்டு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் அட்டை மருத்துவ காப்பீடு ஓட்டுநர் உரிமம் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இந்திய கடவுச்சீட்டு பாராளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினருகளுக்கான அலுவலக அட்டை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 20A சட்டத்தின்…
