நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பதிப்பின்படி மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு நீட்டிப்பின் பொது வகை-3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் நகை கடைகள் மற்றும் துணி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது வகை -2 இல் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள நகை கடைகள், துணி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. திருச்சி, அரியலூர், கடலூர், தருமபுரி, மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி…
Author: Pradeepa
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) Assistant Commandant (சிவில் / இன்ஜினியர்) காலியிடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் அறிவிப்பைப் படித்து விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு – https://crpf.gov.in/rec/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_218_1_475062021_English.pdf பதவியின் பெயர் – CRPF Assistant Commandant Offline Form 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி – 29-07-2021 கல்வி தகுதி – Bachelor’s Degree (Civil Engineering) முடித்து இருக்க வேண்டும். கட்டணம் – முன்பதிவு செய்யப்படாத / EWS / OBC (ஆண்களுக்கு) ரூ .400 கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / பெண் வேட்பாளர்களுக்கு கட்டணம் இல்லை. கட்டணம் செலுத்தும் முறை – Indian Postal Orders and Bank Drafts only வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மொத்த காலியிடம் – 25 UR – 13 காலியிடங்கள் EWS – 02…
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நேரு விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் விளையாட்டு வீரர்களுக்கு team sprit மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்கள் ஒரே நோக்கில் இருந்தால் மட்டுமே முழு வெற்றியை அடைய முடியும். விளையாட்டு துறைக்கு தமிழக அரசு என்றுமே துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி,வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி,வெண்கலம்…
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் பினாகா ராக்கெட் பரிசோதனையை நேற்று(வெள்ளிக்கிழமை) நடத்தியது. ஒடிஸா மாநிலம், பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 25 பினாகா ராக்கெட்டுகளை ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பினாகா ராக்கெட் அமைப்பின் நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் டிஆா்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். டிஆா்டிஓ செயலா் சதீஷ் ரெட்டி இந்த சோதனையில் ஈடுபட்ட குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 11 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலைக்கான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் பணி இடம் – கோயம்பத்தூர் 1. Teaching Assistant காலியிடங்கள் – 03 வருமானம் – 36,000 – 49,000 2. Junior Research Fellow காலியிடங்கள் – 04 வருமானம் – 20,000 3. Senior Research Fellow காலியிடங்கள் – 03 வருமானம் – 31,000 4. Research Associate காலியிடங்கள் – 01 வருமானம் – 49,000 கல்வி தகுதி – சம்பத்தப்பட்ட துறையில் பி.எஸ்இ, எம்.எஸ்இ, எம்பிஎ பட்டம் பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை – நேர்முக தேர்வு மூலம் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணையதள முகவரி – https://tnau.ac.in/csw/job-opportunities/
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து கட்டுமான தொழிலாளர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வறுமையை போக்கும் நோக்கத்தில் 1,29,444 தொழிளார்களுக்கு உணவு பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 6,66,44,243 ரூபாய் செலவில் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி…
ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பற்றி பார்ப்போம். ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு அடுத்தபடியாக தங்கம் வென்ற போட்டின்னு பார்த்தா துப்பாக்கி சுடுதல் போட்டி. 2008 ஆம் ஆண்டு நடத்தைப்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் தொடரில் அபினோ பிந்த்ட்ரா தங்கப்பதக்கம் வென்றார். இந்த தடவை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உடைய மிக பெரிய பலம் துப்பாக்கி சுடுதல் அணி. துப்பாக்கி சுடுதலில் மட்டும் மொத்தம் 15 பேர் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்மங்கை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பதால் மறுபடியும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல்…
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட முன்வரைவு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குஜராத், மகாராஷ்டிரா கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் புதுச்சேரி ஆகிய 9 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுவரை மாநில அரசுகள் நிர்வகித்து நெறிப்படுத்தி வரும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய துறைமுகங்கள் சட்ட முன்வரைவு 2021ஐ மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் உருவாகியுள்ளதாகவும் அதுகுறித்து விவாதிக்க வரும் 24 ஆம் தேதி மாநில அமைச்சர்களின் கூட்டத்துக்கு கடல்சார் மேம்பாட்டு குழுமம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள 1908 ஆம் ஆண்டில் துறைமுகங்கள் சட்டத்தின்படி சிறு துறைமுகங்களை அமைக்க திட்டமிடுவது மேம்படுத்துவது நெறிப்படுத்துவது கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளதாக…
ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய மினி 3-டோர் ஹட்ச் விலை ரூ .38 லட்சம், அனைத்து புதிய மினி கன்வெர்ட்டிபிள் ரூ .44 லட்சம் மற்றும் அனைத்து புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹட்ச் ரூ .45.5 லட்சம். இதுகுறித்து BMW குழுமத்தின் இந்தியத் தலைவர் விக்ரம் பவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதிய மினி 3-டோர் ஹட்ச் மற்றும் மினி கன்வெர்ட்டிபிள் ஆகியவை 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகின்றன. மினி 3-டோர் ஹட்ச் மணிக்கு 0 முதல் 100 கிமீ / மணி வரை 6.7 வினாடிகளில் வேகமாகச் செல்ல முடியும், அதே நேரத்தில் மினி கன்வெர்ட்டிபிள் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தில் 7.1 வினாடிகள் ஆகும். மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ்…
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி போன்ற பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் முழு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது…
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சதிரன் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தளபதி 65 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருந்தது. இன்று தளபதி விஜயின் 47 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனால் நேற்று பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளார். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் கூடங்குளம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) ஜெனரேட்டர் பொருத்தும் பணி தொடங்குகிறது. கூடங்குளம் அரசு மருத்துவமனையில் இன்னும் 10 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் தடுப்பூசிக்காக பணத்தை மாநிலங்கள் செலவழிக்க வேண்டாம். இன்று முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இன்று முதல் இணையதள முன்பதிவு இல்லாமல் நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் B.ed, M.ed பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டில் அரியர் வைத்து இருக்கும் மாணவர்வர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் தொடங்க உள்ளது. B.ed, M.ed படிப்பிக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் இன்று(திங்கள்கிழமை) முடிவடைய உள்ளது. B.ed, M.ed படிப்பிக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு மற்றும் முதலாம் ஆண்டிற்கான அரியர் தேர்வு ஆன்லைன் மூலம் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/FINAL%20TIME%20TABLE%202021.pdf.pdf என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
