தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மின்சார வாரியம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மின்சார கட்டணத்தைக் கணக்கீடு செய்து ஆன்லைன் மூலம் செலுத்து முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் குறைத்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு மின்சார ரீடிங் எடுக்கும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Author: Pradeepa
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு எளிமையான முறையில் சேவைகளை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் Gas சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய வழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. Gas சிலிண்டர் புக் செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு போன் செய்து உங்களுக்கான மொழியை தேர்வு செய்து, புக் செய்வதற்கான எண்ணைஅழுத்த வேண்டும். அதன்பிறகு புக் செய்ததற்கான குறுஞ் செய்தி உங்கள் தொலைபேசிக்கு வரும். ஆனால் இப்போது சிலிண்டர் புக் செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். எல்பிஜி கேஸ் சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்த சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் ஒடிசா , கோட்டா பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்…
தமிழக முதலவர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசியை அதிகரித்தல், நீட் தேர்வை ரத்து செய்தல், GST நிலுவை தொகையை வழங்குதல், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அளிக்க உள்ளதாக கூறபடுகிறது. ஜூன் 18 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி அலையை தொடங்குவது தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 தடுப்புசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புதுப்பேட்டை, மாதனூர், நாட்றம்பள்ளி, குனிச்சி, உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு பள்ளிக்கூடங்களான புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆண்டியப்பனூர், காக்னாம்பாளையம், ஆலங்காயம், வாணியம்பாடி, நியூ டவுன், ஜோலார்பேட்டை மேல்நிலைப்பள்ளி, நாட்றம்பள்ளி நடுநிலைப்பள்ளி, ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளிலும் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை,ஆம்பூர் உள்ளிட்ட…
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 115 மருத்துவர்கள், 189 செவிலியர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது குறித்து தலைமை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 115 மருத்துவர்கள், 189 செவிலியர் பணி அமர்த்தப்பட்ட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மருத்துவர்களுக்கான மாத வருமானம் ரூ. 60000, செவிலியர்களுக்கு மாதம் ரூ.15000 மற்றும் 6 மாதத்திற்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மருத்துவர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். செவிலியர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் 94983 46492 என்ற எண்ணிலும், செவிலியா்கள்…
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 சட்டங்களை திரும்ப பெற கோரி பல்வேறு மாநிலத்தை சார்த்த விவசாயிகள் 6 மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்படும் ஏற்படாத நிலையில் டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது என்பதை நினைவு படுத்தும் விதமாக இன்று(புதன்கிழமை) நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் சேர்ந்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கருப்பு தின போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஹரியானா, பஞ்சாப், சங்குரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து உள்ளனர். இந்த போராட்டத்தால் கொரோனா வைரஸ்…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று(திங்கள் கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான தடையும் இன்றி கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தோட்டக்கலை துறை IAS ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறாத வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் 13,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை…
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதாகவும் கூறினார். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்திய இரண்டு நாட்களில் தொற்று எண்ணிக்கை குறைத்து உள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் இதுவரை கருப்பு புஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை தொற்று குறித்து அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை விதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1/2 ஸ்பூன் கடுக்காய் பொடியை எடுத்து1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் சேர்த்து நன்றாக கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். 3 கிராம்பை பொடியாக்கி 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் சேர்த்து நன்றாக கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 ஸ்பூன் நித்ய கல்யாணி பொடியை சேர்த்து கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ATM, வங்கி சேவைகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகள் செவ்வாய் கிழமை முதல் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ. இறையன்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகள் திறப்பதற்கான அறிக்கையை அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறந்து விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கிட வேண்டும். கொரோனா நிவாரண…
வியாதியானது நம்மை ஒட்டிக்கொள்வது போல் உடல் பருமனானது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க ஒரு சிலர் உடற்பயிற்சி மேற்கொள்வதும்,யோகா செய்தல் போன்ற வேளைகளில் ஈடுபடுவது உண்டு. ஆனால் உணவு முறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. எனவே உடல் எடையை விரைவாக குறைக்க பழச்சாறு தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவிற்கு பதிலாக ஜூஸ் பருகவேண்டும். பழச்சாறு குடிக்கும்போது வயிறு நிறைத்து நீண்ட நேரம் பசிக்காமல் ஆரோகியமாக இருக்கவைக்கும். அந்த வகையில் நாம் ஒரு சில பழச்சாறு பற்றி கிழே காண்போம். அன்னாசி பழம் ஜூஸ் அன்னாசி பழத்தை எடுத்துக்கொண்டு சிறிதளவு தணண்ணீர் சேர்த்து அறைத்து ஜூஸ் செய்து பருகினால் உடல் கொழுப்பை கரைத்து ஒரு மாதத்திற்குள் எடை குறைக்க உதவும். தக்காளி ஜூஸ் தக்காளியை 3 அல்லது 4 எடுத்து நன்கு வேகவைத்து சிறிதளவு வெல்லம் சேர்த்து அறைத்து ஜூஸ் போன்று குடித்து வந்தால்…
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10 ஆம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தடைகள் எதுவும் இன்றி செலயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. நாளை முதல் தொழிற்சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும். இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர் களைஅழைத்து வர 4 சக்கர வாகனங்களை பயப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தங்களின் வருமான வரிகளை தாக்கல் செய்ய தற்பொழுது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இணையதளதை பயன்படுத்தி மின்னணு முறையில் தங்களின் வருமான வரி கணக்குகளை செலுத்தி வருகின்றனர். வணிகம் சம்மந்தமான வரி கணக்குகளையும் இதில் தாக்கல் செய்துகொள்கின்றனர். இந்த இணையத்தளம் மூலம் வருமான வரித்துறையிடம் தங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம். பிறகு அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் போன்ற மேல்முறையீடு செய்திட இந்த இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் தற்சமயம் ஒரு புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளனர். இந்த www.incometaxgov.in என்ற இணையதளமானது ஜூன் 7ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் . இதை எளிமையான முறையில் பயன் படுத்தலாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தற்பொழுது செயல்பட்டுவரும் இணையதளம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் புதிய…
YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் 3 வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். 2020 மே 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரை அரங்குகளில் வெளியிடமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கியுள்ளார். பாடல் – நேத்து திரைப்படம் – ஜகமே தந்திராம் பாடல் ஆசிரியர் -தனுஷ் பாடகர் – தனுஷ் இசை – சந்தோஷ் நாராயணன் டிஓபி – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கலை இயக்குநர்கள் – டி.சந்தனம்,…
