நம் அன்றாட உணவில் அதிக அளவு காய்கள் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
நம் உடலுக்கு தேவையான சத்துகள் காய்களில் தான் அதிகம் உள்ளது. தினமும்
ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியம். அந்த
வகையில் “வெண்டைக்காய்” நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும்
நல்லது.

 

வெண்டைக்காயின் நன்மைகள்

பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று இந்த காயினை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்கிறார்கள். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளைவளர்ச்சி, மூளை செயல் திறன் ஆகியவை
அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். இதனால் வெண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

ஞாபகசக்தி அதிகரிக்கும்

ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். குறிப்பாக முதியவர்களுக்கு அதிக ஞாபக
மறதி இருக்க கூடும். இவர்களின் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும்,
அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு 3 அல்லது 4
முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு
வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக
குறையும் என்று கண்டறிந்துள்ளனர். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள்
வாரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய்
சாப்பிடுவது நல்லது.

புற்று நோய் செல்களை அழிக்கும்

நமது உடலில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று
நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது
மிகவும் நல்லது. நம் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும்,
மீண்டும் வளரக்கூடியவை.

இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான
செல்களை வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காயிக்கு உண்டு. அதனால்
வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்து காணப்படும். இதை
சாப்பிட்டால் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.பொதுவாக
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினர் உடலில்
நோயெதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவார்கள்.குழந்தைகள் மற்றும்
முதியவர்கள் சரியான விகிதத்தில் உணவு எடுத்து கொண்டால் அவர்களின்
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

See also  அற்புதமான மூலிகையான கீழாநெல்லியின் மருத்துவ குணங்ககள்

வயிறு பிரச்சனை தீரும்

வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும். இன்றைய காலங்களில் சிலருக்கு வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண்,
செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல
பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் வெண்டைக்காயை அதிகம்
சாப்பிட வேண்டும்.

கல்லீரல் பிரச்சனை தீரும்

நமது உடலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அழற்சியினாலும் சிலருக்கு
கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகிறது. இந்த பிரச்னையை சரி
செய்வதில் வெண்டைக்காய் ஒரு முக்கிய உணவாக விளங்குகிறது. தினமும்
வெண்டைக்காய் வைத்து சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு
செயல்பட தொடங்கும்.

சிறுநீரகம் பிரச்சனை தீரும்

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சு
பொருட்களும் சிறுநீர் வழியாக தான் வெளியேறும். ஒரு சிலருக்கு உடலுக்கு
தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறும் பிரச்சனை உள்ளது. இந்த
சத்துக்குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டால் இந்த
பிரச்சனை தீரும்.

கொலஸ்ட்ரால் அளவு உயராது

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. நமது
உடலில் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு சரியான அளவில்
இருக்க வேண்டும்.அதனால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடலாம்.

உடல் எடை குறையும்

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ‘அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற தீராத பசி உணர்வு’ தான். வெண்டைக்காய் சாப்பிட்டால் இந்த பசி உணர்வு குறையும். மேலும் அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையையும் கட்டுப்படுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடை மிக விரைவில் குறையும்.