- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது.
- கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்தது.
- தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று தமிழகத்தில் 2,181 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
- தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 833 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உருவாகியிருக்கிறது.
- மேலும் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 188 பேரும், கோவையில் 180 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
- இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை இந்நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,53,733 ஆக உள்ளது.
- இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ,670 ஆக உயர்ந்து உள்ளது.
- மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இன்று ஒரேநாளில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- இதனால், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தற்போது இந்தியாவில் 1,19,71,624 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 1,20,39,844 ஆக உயர்ந்துள்ளது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

