ஹைலைட்ஸ் :

  • தற்காலிக சட்டசபை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார்.
  • சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
  • எதிர்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக கட்சி அதிக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

நேற்று(மே 10ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

சட்டசபை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி சார்பில் சபாநாயகர் தேர்தலில் அப்பாவும், துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் திமுக கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளதால் நாளை நடைபெறவுள்ள சபாநாயக் தேர்தலில், அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்து எடுத்ததற்க்கான கடிதத்தை, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி. காமராஜ், செங்கோட்டையன் ஆகியோர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினர்.

See also  முகக்கவசம் அணியுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் - கூகுல் டூடுல்