தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமையான ஆட்சியை பிடித்துள்ளது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மே 4 ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை திமுக கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 133 உறுப்பினர்களின் ஆதரவு ஸ்டாலினுக்கு கிடைத்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 9.10 மணிக்கு மு.க. ஸ்டாலின் அவருக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. ஸ்டாலின் அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நீதிபதிகள் என 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

முதல் முறையாக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் நான் என தொடங்கி பதவி ஏற்றுக்கொண்டார்.

 

See also  உடல் ஆரோக்கியத்தை காக்கும் இஞ்சி தேநீர் செய்முறையை பார்ப்போம்