ஹைலைட்ஸ்:

  •  கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000.
  • சாதாரண நகரப்  பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப்பயணம்.
  • ஆவின் பால் ஒரு  லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  மு.க.ஸ்டாலினுடன்  33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு  விழா எளிமையாக நடந்தது.

பதவியேற்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சருக்கான இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்தார்.

தலைமை அலுவலகத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின்  5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

1. கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ .4000 வழங்கப்படும். முதல் கட்டமாக இம்மாதமே ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

2. ஆவின் பால் ஒரு  லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. இது வரும் மே 16 ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.

3. சாதாரண நகரப்  பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப்பயணம்.

4. தொகுதி வாரியாக  மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றும் திட்டத்தில் கையெழுத்து.

5. தனியார் மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள 5 திட்டங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கையெழுத்திட்டுள்ளார்.

See also  கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை