• மத்திய அரசானது, கொரோனா வைரஸ் முதல் அலையின் போது வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பு நேர்ந்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்நிலையில் மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்துள்ளது.
  • அடுத்தகட்டமாக மத்திய அரசு, புதிய காப்பீடு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்களை வெளிட்டுள்ளனர்.
  • மத்திய அரசானது பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.1.70 லட்சம் கோடியை 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடாக அறிவித்தது.
  • இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றோருக்கு காப்பீடு வழங்கப்பட்டது.
  • இந்நிலையில் இந்த காப்பீடுத் திட்டம் மார்ச் மாதம் 24-ஆம் தேதிவுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து அந்த காப்பீடு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து. புதிய நிறுவனத்துடன் காப்பீட்டுக்காக பேசி வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
  • இதைப்பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த மாதம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 287 விண்ணப்பதாரர்களின் கோரிக்கை காப்பீடு திட்டத்தில் இன்னும் பரிசீலனையில் இருக்கிறது.
  • இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் இருக்கும்போது இறந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களும் இல்லை.
  • ஆனால் 739 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
  • இதை பற்றி அசோக் பூஷண் மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநிலங்களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி எழுதிய கடிதத்தில்,’ கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்ககளுக்கு கொரோனாவால் உயிரிழப்பு நேர்ந்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் காப்பீடு திட்டம் சிறப்பாகச் செயல்பட்டது.
  • இந்தத் திட்டத்துக்கு தகுதியானவர்கள், மார்ச் 24ம் தேதி நள்ளிரவு வரை காப்பீடு கோருபவர்கள் மட்டுமே பயன்பெறமுடியும்.
  • இந்த காப்பீடு திட்டத்தில் விண்ணப்க்க தகுதியானவர்கள் தங்களின் ஆவணங்களை ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி கொரோனா தொற்று முதற்கட்டமாக வந்ததும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் 90 நாட்களுக்கு மட்டும் மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.
  • ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததை கருத்தில் கொண்டு இந்த திட்டம் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இப்போது இந்த திட்டமானது முடிந்துவிட்டதால், புதிய நிறுவனத்துடன் மத்தியஅரசு பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த புதிய காப்பீடு திட்டம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்குத் மீண்டும் எப்பொழுது தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை .
  • கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பணியாற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவாக புதிய காப்பீடு திட்டத்தை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
See also  CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அரவிந்த கெஜ்ரிவால்