விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதால் நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, அடுத்த மாதம் இறுதி வரை செய்யப்பட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று டுவிட்டரில் ஏ.டி.எப்., எனப்படும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில்கொண்டு விமான சேவையின் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்படுகிறது.

எனினும், அதிகபட்ச விமான கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஒரு மாதத்தில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்தினால் 100 சதவீத விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

See also  இந்தியாவில் ஸ்மார்ட்போன் ரியல்மி 8 சீரிஸ் மார்ச் 24 அன்று அறிமுகம்