- கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
- தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்றயிறக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது தங்கம் வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளார்கள்.
- நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து இருந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 விலை குறைந்துள்ளது.
- இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.33,536-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 குறைந்து, ரூ.4,192-க்கு விற்கப்படுகிறது.
- நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,500 ரூபாயாக இருந்தது. இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 1,000 குறைந்து 68,500-ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை ஆகிறது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

