மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST கவுன்சில் கூட்டத்தை மே 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதாக இன்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2021 மே 28 ஆம் தேதி புதுதில்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் GST கவுன்சிலின் 43 வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில நிதியமைச்சர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

2020 ஆண்டு GST கவுன்சிலின் 42-வது கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. 2021-இல் நடைபெறும் முதல் GST கவுன்சில் கூட்டம் என்பதால் நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID -19 இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல், 2021-22 ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ.1,56,164 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இழப்பீடு முன்னர் திட்டமிடப்பட்டதை விட அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.”

முகக்கவசம், கையுறைகள், PPE கருவிகள், வெப்பநிலை சோதனை உபகரணங்கள், ஆக்சிமீட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பலவற்றில் GST விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கு அவசர விவாதம் தேவை என்று பஞ்சாப் நிதி மந்திரி மன்பிரீத் பாடல் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் GST சட்டத்தின் கீழ் வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

See also  ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு