நம் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து புரதம் தான். நம் உடல்
வளர்ச்சிக்கும், செல்களின் செயல்பாட்டுக்கும் புரதம் மிகவும் அவசியமானதாக
கருதப்படுகிறது. எனவே தான் வளரும் குழந்தைகளுக்கு புரத வகையான உணவுகளை கொடுப்பது மிகவும் நல்லது என்று கூறுவார்கள. முட்டையில் மட்டும் அதிக புரதம் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் முட்டையைத் தவிர பிற உணவுகளிலும் புரதமானது அதிகளவில் இருக்கும். சைவ உணவு உண்பவர்கள் முட்டையைத் தவிர பிற வகை புரத உணவு பொருட்களை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அது என்னனென்ன உணவு பொருட்கள் என்று பார்ப்போம்

நம் உடலுக்கு தேவையான புரோட்டீன் முட்டையில் மட்டுமில்லாமல் பிற சைவ உணவு
பொருட்களிலும் மிக அதிக அளவு இருக்கும். கொண்டைக்கடலை,பாதாம்பட்டர் ,
பாலாடைக்கட்டி, ​பூசணிக்காய் விதைகள் போன்ற உணவு பொருட்களிலும்
முட்டையில் இருப்பதைப் போலவே அதிகமான புரதம் காணப்படுகிறது.

​கொண்டைக்கடலை

1/2 கப் கொண்டைக்கடலையில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது. அதனால் சைவ
உணவு உண்பவர்கள் கொண்டைக்கடலையை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
முட்டையில் வெறும் 6 கிராம் புரதம் தான் உள்ளது.

​காட்டேஜ் சீஸ்

காட்டேஜ் சீஸில் கிட்டத்தட்ட 12 கிராம் புரதம் இருக்கிறது. இந்த
பாலாடைக்கட்டியை மற்ற பழங்களுடன் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியை உருவாக்க முடியும். இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு.இது ஒரு
ஆரோக்கியமான குறைந்த கொழுப்புசத்துள்ள உணவாகும்.

​பாதாம் பட்டர்

2 தேக்கரண்டி பாதாம் வெண்ணெயில் 7 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.
இதில் இதய ஆரோக்கியத்திற்கான நல்ல கொழுப்புகளும் காணப்படுகிறது. எனவே நம்
உடலுக்கு தேவையான புரத சத்தை பூர்த்தி செய்ய இந்த பாதாம் வெண்ணெய்யை
எடுத்துக் கொள்ளலாம். இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், வெண்ணிலா சாறு அல்லது
கறிவேப்பிலையுடன் ​பாதாம் பட்டர் சேர்த்து மசாலா செய்து சாப்பிடலாம்.

​பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டியில் இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகிறது. இதில் 7
கிராம் அளவிற்கு புரதம் காணப்படுகிறது.மேலும் கால்சியம், துத்தநாகம்,
பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் பி 12 போன்ற ஊட்டச்சத்து
பொருட்களும் பாலாடைக்கட்டியில் அதிகம் உள்ளது. ஆனால் ​பாலாடைக்கட்டியில்
கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது இதய ஆரோக்கியத்திற்கு
நல்லதல்ல. பாலாடைக்கட்டியில் உப்பு அதிகளவு இருக்க வாய்ப்பு உள்ளது.

​பருப்பு வகைகள்

பழுப்பு, பச்சை, கருப்பு, மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற
நிறங்களில் பருப்புகள் காணப்படுகின்றன. 1/2 கப் பருப்பில் 8 கிராம்
அளவிற்கு புரதமானது காணப்படுகிறது. அதனால் பருப்பு வகை உணவுகளை உண்பது மிகவும் சிறந்தது.

See also  வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் vitamin b complex tablet uses in tamil

​பூசணிக்காய் விதைகள்

துத்தநாகம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும்
செலினியம் போன்ற மூலப்பொருட்கள் ​பூசணிக்காய் விதைகளில் அதிகம் உள்ளது.
ஒரு அவுன்ஸ் பூசணிக்காய் விதைகளில் 8 கிராம் அளவிற்கு புரதம் காணப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் ரொட்டி,பாயாசம் ஆகியவற்றில் பூசணிக்காய் விதைகளை சேர்த்து பயன்படுத்தி வரலாம்.

இறால் மீன்

இறால் மீன்களில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் குறைவாகவும், பாதரசம்
குறைவாகவும் உள்ளன. 4 அவுன்ஸ் இறாலில் சுமார் 17 கிராம் அளவிற்கு புரதமானது காணப்படுகிறது. எனவே நம் உடலின் புரத அளவை அதிகரிக்க இறாலை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஜெர்கி

ஜெர்கி என்பது உலர்ந்த மற்றும் மெலிந்த இறைச்சி ஆகும். ஒரு அவுன்ஸ்
ஜெர்கியில் 15 கிராம் வரை புரதம் காணப்படுகிறது.இதில் உப்பு, சர்க்கரை
மற்றும் நைட்ரேட் ஆகிய பொருட்கள் அதிகம் உள்ளன. வான்கோழி, சால்மன்
மற்றும் எல்க் மற்றும் தீக்கோழி ஆகியவற்றிலிருந்தும் இது தயாரிக்கப்படுகிறது. இதை வாங்கி சமைப்பதற்கு முன் இது தயாரித்த தேதியை பார்ப்பது மிகவும் முக்கியம்.