தினமும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை உணவு அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் கழிக்க உதவும். காலை உணவு எடுத்து கொள்வதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு சில உணவு பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவு சாப்பிடக்கூடாது, எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. தக்காளியில் இருக்கும் டேனிக் அமிலம், இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்குகிறது. இதனால் வயிற்றில் கற்கள் கூட உருவாகும். மேலும் இதனால் அல்சர் போன்ற பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ், தக்காளி சாஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலிருக்கும் மக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மாத்திரைகளை எப்போதுமே வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் மாத்திரைகள் வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும். டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தால் மட்டும் வெறும் வயிற்றில் மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. ஆல்கஹாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. அப்படி குடித்தால் ஆல்கஹாலில் இருக்கும் சேர்மங்கள் வயிற்றுப் படலத்தில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் குடிப்பழக்கம் நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருக்கும். இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, குமட்டல் மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும்.

காரமான உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளக் கூடாது. அப்படி காரமான உணவுவை காலையில் எடுத்து கொண்டால், காரமானது வயிற்றில் இருக்கும் அமிலத்துடன் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும். இந்த காரம் வயிற்றில் பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிறு உப்புசத்தை உண்டாக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:

தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால், ஊடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ஆரோக்கியமாக இருப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது மிகவும் நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

See also  தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது

தினமும் 6 பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இவை செரிமானத்தை எளிமையாக்குகிறது. மேலும் இது அல்சர், வயிற்று கோளாறு பிரச்சினைகளை உருவாக்காமல் தடுக்கிறது. பாதாம் பருப்பை முதல் நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

பப்பாளி பழத்தில் வைட்டமின் இ, வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் அதிகம் இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிட்டால் செரிமானத்துக்கு துணைபுரியும்.

காலையில் உணவு பதார்த்தங்களுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்புடன் செயல்படும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரிக்க செய்து உடலுக்கு சக்தியை கொடுக்கும்.

காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. அது நம் உடலில் கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும். காலையில் தானியங்களில் தயாரித்த பிரெட் சாப்பிடுவது நல்லது. அதில் உள்ள ஊட்ட சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.