- நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
- திருப்பதி எழுமலையான தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், கொரோனா தொற்று குறைந்த இருந்தபோது தினசரி சா்வதரிசன டோக்கன்கள் (இலவச தரிசனம்) வழங்கப்பட்டு வந்தது.
- கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
- இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், கடந்த மாதம் இறுதியில், 22 ஆயிரம் டோக்கனாக குறைக்கப்பட்டது. மேலும் கடந்த வாரம் இது 15 ஆயிரமாக குறைத்தது.
- தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துவதாக திருப்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- சமீபத்தில் மகாராஷ்டிராவில், ஷீரடி கோயில் தேவஸ்தானம், ஷீரடி கோவில் தரிசனத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

