- கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது.
- கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை விசத் தொடங்கியுள்ளது.
- இதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
- இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இப்போது அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளை தமிழக அரசு தடை செய்துள்ளது
- மேலும் வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

