- Advertisement -
பொதுவாக ஏலக்காயில் நிறைய மருத்துவகுணங்கள் நிறைந்து இருக்கும். ஆனால் நாம் இதை ஒரு வாசனை பொருளாக மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறோம்.
இனிப்பு பலகாரங்களில், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காகயும், ருசிக்காகயும் ஏலக்காயை பயன்படுத்துவது மட்டும் தான் நமக்கு தெரியும்.
ஏலக்காய் நமக்கு மருந்தாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
- தினமும் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடியை தேன் சேர்த்து குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவளர்ச்சி குறைபாடுகள் நீங்கும்.
- இதுமட்டுமில்லாமல் நெஞ்சில் சளி உள்ளவர்களுக்கும், இருமல் மற்றும் வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. மேலும் ஏலக்காய் தூள் இவர்களுக்கு நல்ல பலனையும் தருகிறது.
- இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது. அதனால் இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். ஏலக்காயை நம் உணவில் அதிக அளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு தீங்கும் வரக்கூடும்.
- வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணம் செரிமானம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைதான். தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் செரிமானம் பிரச்சினையும் தீரும். அதேபோல் வாயில் துர்நாற்றமும் ஏற்ப்படாது.
- பசிக்கவில்லை அல்லது சாப்பிட பிடிக்கவில்லை என்று உங்களுக்கு தோன்றினால் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசியும் எடுக்கும், ஜீரண உறுப்புகள் சீராகவும் இயங்கும்.
- Advertisement -