- கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துவதாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
- இதைப்பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீசல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.
- அவசரக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைப் பொருத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்க கூடும்.
- கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
- அதன்பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டது.
- இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 20 நாடுகளுடன் இந்தியா விமான போக்குவரத்துக் கழகம் உடன்படிக்கை செய்து இருந்தது.
- தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

