ஜியோ நிறுவனம் 3  டேட்டா திட்டங்களை கொண்டுவந்துள்ளது.  அவற்றின் விலை நிலவரம் என்ன ? அவற்றின் நன்மைகள் என்னென்ன ? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து பார்க்கவும்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் பிளான்

இத்திட்டம் ஒரு வரம்பற்ற கம்போ ப்ரீபெய்ட் பிளான் ஆகும்.  இத்திட்டமானது 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.  3 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு வழங்கும்.  இத்திட்டத்தில் நமக்கு 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது.  மேலும் தினசரி டேட்டா முடித்த பிறகு பயனாளர்கள்  64 கே.ஜி.பி.எஸ் என்ற இணைய வேகத்தை பெறுவார்கள் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.

ஏர்டெல் ரூ.78 மற்றும் ரூ.248 அறிமுகம்; மாதத்திற்கு ஒன்று வருடத்திற்கு ஒன்று

டேட்டாவை தவிர்த்து ப்ரீகால்  மற்றும் ஒரு நாளைக்கு 100 sms ஐ  வழங்குகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா  போன்ற செயலிகளுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. மற்றும் பெரிய தொலைத்தொடர்புடைய ஆப்ரேட்டர்களுடன் ஒப்பிடும் போது ஜியோ நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

ஜியோ ரூ.401 ப்ரீபெட் பிளான்

இத்திட்டத்தில் பிரபலமான பிளான் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் தான்.  இது செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட திட்டமாகும்.  இது 28 நாட்களுக்கு 84 ஜிபி டேட்டாவை வழங்கும்.  இப்போது கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இதன் மொத்த டேட்டா 90 ஜிபி ஆகும்.  மேலும் இதில் அன்லிமிட்டட் அழைப்புகள் நாளொன்றுக்கு 100 sms வழங்கப்படுகிறது.  மேலும் டிஸ்னி +ஹாட்ஸ்டார் விஐ பி  சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் பிளான்

ஒரு நாளைக்கு 3 ஜிபி என்ற அளவுடன் 84 நாட்களுக்கு இருக்க கூடிய திட்டம் ஆகும்.  இத்திட்டத்தின் மொத்த டேட்டா 252  ஜிபி.  இதை தவிர அன்லிமிட்டட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 sms களும் கிடைக்கிறது.

Categorized in:

டெக்னாலஜி,

Last Update: January 22, 2021

Tagged in:

,