• தேர்வு பற்றி அச்சம் நம்மில் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறுமாறுதல் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம்.
  • தேர்வு நேரங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாற்றங்களையும் சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில மாணவர்கள் தேர்வுநேரங்களில் சாப்பிடாமல் படித்துக்கொண்டே இருப்பார்கள்.
  • பெற்றோர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துதாமல் விட்டுவிடுகின்றனர். தேர்வு நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுகள் பெரிதும் துணை புரிகின்றன.
  • நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுககளை உண்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நல்ல நினைவாற்றலை தந்து, நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகை செய்கிறது.
  • மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்காக காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், நேரடியாக தேர்வுகளை சமாளிக்க சென்று விடுவார்கள்.ஆனால் தேர்வு எழுதும்போது மூளையானது சோர்வடைந்து எழுத்தமுடியாமல் போய்விடும். எனவே மாணவர்கள் தேர்வுக்கு முன்னும் பின்னும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் நீர் ஆதாரங்களை எடுத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது. தேர்வின் பொது தண்ணீரை எடுத்துக்கொண்டு போவது, படிக்கும்போதும் நீரை அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது. ஜூஸ் அதாவது எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பானங்களை பருகுவது மிகவும் நல்லது.
  • காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்களை உட்கொள்ளுவது ஆரோகியமானது. தானியங்களை நம் காலை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் இடைவெளி விட்டு படிப்பதும், சரியான நேரத்தில் தூங்குவதும் நல்லது.

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவு பொருட்கள்:

நெய்:

நெய் ஞாயாபகசக்தியை அதிகரிக்கக்கூடியது.காலை,மலை மற்றும் இரவு என அனைத்து வேலைகளிலும் நெய் சேர்த்துக்கொள்ளுவது மாணவர்களுக்கு நல்லது. ஒமேகா 3-ன் முக்கிய சாதியாக திகழும் நெய்யை தாராளமாக பயன்படுத்தலாம்.

தயிர்:

மாணவர்கள் தேர்வின் போது மனஅழுத்தத்தை தடுக்கவும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்கவும் தயிர் பயன்படுகிறது. தயிரில் சிறிதளவு சக்கரையை கலந்து உட்கொள்ளவது மிகவும் நல்லது.

சர்க்கரை:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவும் போது இனிப்பு வகைகளை உணவில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரையானது மாணவர்களின் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும்,மூளையை சோர்வடையாமல் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.நீண்ட நேரம் மாணவர்கள் மன திறனுடன் படிப்பதற்கான சக்தியை தருகிறது.

See also  முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப் படத் திறப்பு விழா