மூச்சு பிடிப்பு காரணம்:

பெரும்பாலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதன் மூலமாக இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அதேபோல் அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவருக்கு இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படலாம்.

சளி :

சளித்தொல்லை நிமோனியா, கிருமித் தொற்று போன்ற வற்றினாலும் மூச்சுத் தொல்லை பிரச்சினை வரலாம்..
நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளுரா என்னும் வெளிப்புற சவ்வு கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மூச்சுப் பிடிப்பு ஏற்படும்.
காச நோய் காரணமாகவும் மூச்சுப்பிடிப்பு வரலாம் இவர்கள் இருமினாலோ வலிக்கும்..

அலர்ஜி:

ஆஸ்துமா அலர்ஜி போன்றவை காரணங்களாகும் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம்.இவை பட்டாசு, மருந்து, கொசு, விஷ வாய்வு புகை போன்றவற்றை சுவாசிப்பதன் மூலமாகவும் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம்.

அதிக குளிர்

நேரடியாய் தாக்கும் அதிகப்படியான குளிர்ச்சி மார்புக்கூடு இடையிலுள்ள தசைகளை இருக்கும் இதனால் மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது..

அஜீரணக் கோளாறுகள் (Acidity)

எண்ணெய் பொருட்கள் இரவு அதிகம் தூங்காதே இருத்தல் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காலையில் உணவை தவிர்த்தல் வேறு வயிற்று அதிக நேரம் இருத்தல், ஆல்கஹால் அதிக அளவு உட்கொள்வதால், அதிக அளவு சாப்பிடுதல் போன்ற வற்றினால் அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.. இரைப்பை ஆனது அதிகளவு அமிலம் சுரப்பதால் இரைப்பையில் உட்சவ்வும், உணவுக்குழாயின் உட்சவ்வும் அரிக்கப்பட்டு.. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுதல் இறைப்பை விரிவடைவதால் நுரையீரலுக்கு அழுத்தம் தருதல் இதனால் மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது..

மாரடைப்பு:

இதய ரத்தக்குழாய் அடைப்பின் காரணமாக ஏற்படும் மாரடைப்பினால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும்.

சிகிச்சை என்னென்ன செய்யலாம்?

மூச்சுப்பிடிப்பு அடிப்படை காரணம் தெரிந்துகொண்டு அதுக்கு தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பளு தூக்குவதால் ஏற்படும் மூச்சு பிடிப்பிற்கு மூச்சுப்பிடிப்பு வலி நிவாரண மருந்தை தடவலாம் அல்லது வலி மாத்திரைகள் சாப்பிடலாம்.. மேல் வலி நீடித்தால் மருத்துவரிடம் அணுகுவது நல்லது..

சளி மட்டும் அலர்ஜியால் ஏற்படும் மூச்சுப்பிடிப்புக்கு ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக் கொள்ளலாம்..சளி ஓய்வு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கஷாயம் வைத்துக் குடிக்கலாம் போன்றவற்றை வீட்டிலேயே செய்யலாம் 24 நேரம் தாண்டியும் குணமாகவில்லை என்றால் மருத்துவர் அணுகுவது நல்லது.

அதிக குளிரினால் ஏற்படும் மூச்சு பிடிப்பிற்கு ஸ்வெட்டர், ஸ்கார்ப் போன்ற கம்பளி உடைகளால் மார்பு மற்றும் காதுப் பகுதிகளை மூட வேண்டும்.

அல்லது சூடான பானங்கள் அருந்துவது கைகொடுக்கும்.. காசநோய் ஏற்படும் மூச்சு பிடிப்பு மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்
பெரும்பாலும் அஜீரண கோளாறினால் 90% மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது..

எப்படி கண்டறியலாம்?பளு தூக்குதல், சளி, அலர்ஜி, அதிக குளிர், விபத்து போன்றவற்றைநோயாளிகள் சொல்வதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
காச நோயால் ஏற்படும் மூச்சடைப்பின் போது வலி இருக்கும் இடத்தை படிப்பறிவில்லாத எளிய மக்களால் கூட எளிதாக சொல்ல முடியும். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து அது காச நோயா இல்லையா என்பதை மருத்துவர் உறுதி செய்வார். அஜீரணக் கோளாறுகள் மற்றும் மாரடைப்புக்கான மூச்சுப்பிடிப்பை கண்டறிவதில் கவனம் தேவை. இதனால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது மிக நல்லது..

மூச்சுப்பிடிப்பு என்று வருபவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு அது மாரடைப்பாக இருக்கலாம். ஒருவேளை அது சாதாரண மூச்சுப்பிடிப்பாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் இது ரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படும் மூச்சுப்பிடிப்பு இல்ைல என்பதை நோயாளிக்கு உறுதி செய்ய வேண்டும். மாரடைப்பென்றால் தகுந்த சிறப்பு சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர் மேற்கொள்ள வேண்டும்.