நாட்டு கோழி மிளகாய் வறுவல்

நாட்டு கோழி மிளகாய் வறுவல்

இது ஒரு வறுவல் வகையைச்சேர்ந்தது அசைவப்பிரியர்களுக்கு ஞாயிறு என்றாலே அசைவம் செய்வது ஒரு சிறப்பாயிற்று.

இந்த வகையில் இங்கு உங்களுக்காக மிகவும் சுவையான கோழி மிளகாய் வறுவல் செய்வது எப்படி என்று பகிர்ந்துள்ளேன், எனது தாயிரிடம் இருந்து நான் கற்ற எளிதான சமையல் வகையில் இந்த சுவையான கோழி மிளகாய் வறுவல், இது ஆட்டுக்கறி மற்றும் கொழிக்கறியிலும் செய்யலாம்.

இதில் நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் குறைவு வரமிளகாயுடன் கறியை நன்கு வதக்கி செய்வதால் இதன் சுவை தனிச்சிறப்பு, அற்புத சுவை மிளகு ரசம்- உப்புக்கறி கலவை.

செய்யத்தேவையான பொருட்கள்:

கோழிக்கறி                      – 1/2 கிலோ
வரமிளகாய்                      – 10 அல்லது 15
மஞ்சள் தூள்                     –  1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                –   1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                       –   1/2 தேக்கரண்டி
உப்பு                                      –    1 தேக்கரண்டி
இஞ்சி                                     –    பொடியாக நறுக்கியது 1
பூண்டு                                   –     5 பல்
சின்ன வெங்காயம்         –    10
கறிவேப்பிலை                   –    1 கொத்து

செய்முறை:

  • கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாக கழுவவும் .
  •  சுத்தம் செய்த கறித்துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவேண்டும்
  •  வரமிளகாயை சிறு துண்டுகளாக கத்தரிகோல் கொண்டு வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • வானலியில் எண்ணெய் காயவைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கவும், அதன் விதைகள் பொன்னிறமாகும்வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
  •  நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • இப்போது உப்பு மஞ்சள் சேர்த்த கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  •  வரமிளகாய் தக்காளி இரண்டும் தன் தோல் தனித்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும் அதுவே இந்தக்கறியின் தனிச்சிறப்பு. (கவனமாக மிதமான தீயில் வதக்கவும்).
  •  மிளகாத்தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறியைமென்மையாக வேக விடவும்.
  • பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி மணக்க, மணக்க சூடாக பரிமாறவும்.
See also  செட்டிநாடு சிக்கன் பிரியாணி