கொரோனா காலத்தில் நாம் சத்து நிறைந்த நவதானிய உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். நவதானியங்களை தோசையாக செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நவதானிய தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்

துவரம்பருப்பு – 1/4 டம்ளர்

கொள்ளு – 1/4 டம்ளர்

கருப்பு உளுத்தம் பருப்பு – 1/4 டம்ளர்

கொண்டைக் கடலை – 1/4 டம்ளர்

பச்சரிசி – 1/4 டம்ளர்

சோயா – 1/4 டம்ளர்

வெள்ளை சோளம் – 1/4 டம்ளர்

எள்ளு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

காய்ந்த மிளகாய் – 6

இஞ்சி – சிறு துண்டு பொடியாக நறுக்கவும்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தானியங்கள் நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடிக்கட்டி விடவேண்டும். பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவின் மேல் கொத்தமல்லி தூவி தோசையை ஊற்றி லேசாக எண்ணெய் விட்டு எடுக்கலாம். இப்போது ஆரோக்கியமான நவதானிய தோசை தயார். இந்த தோசையை அப்படியே சுவைக்கலாம்.

See also  தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார்