- கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு, வங்கி கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
- ஆனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- மேலும் கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது.
- அந்த கால கட்டத்தில் வட்டியை செலுத்தாமல், ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- இந்த மனு தாக்கலை அசோக்பூஷண் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்ந்து விசாரித்தது. கடந்த ஆண்டு டிச.,17 ல் இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
- நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டது.
- மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. முழு வட்டியை தள்ளுபடி செய்தால் அது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து இருந்தார்கள்.
- கடன் தவணை சலுகை காலத்தில் வாடிக்கையாளரகள் கடன் தவணை செலுத்த சலுகை பெற்றிருந்து அவர்களிடம் இருந்து கூடுதல் வட்டி அல்லது அபராத வட்டி வசூலிக்கப்பட்டு இருந்தால், அதனை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
- மேலும் கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

