• இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளார்கள்.
  • உலகத்திலேயே மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது சினிமா துறையில் வழங்கப்படுகிறது. தற்போது 93வது அக்கடமி அவார்ட்ஸ் வழங்கும் விழாவில் நாமினிகளை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனசும் அறிவிக்க உள்ளார்கள்.
  • பொதுவாக பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த அகடமி விருது நிகழ்ச்சி கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுயுள்ளது.
  • இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இருப்பினும் நேரடியாக சமூக ஊடகங்களின் மூலமாக இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பிரியங்கா சோப்ரா 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்டார் , இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடுகிறார்.
  • எண்ணற்ற படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது . அதில் பெரும்பான்மையான படங்கள் கமலஹாசனின் படங்கள்தான் இருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தநிலையில் தற்போது அந்த படம் போட்டியில் இருந்து வெளியேறியது.
  • இந்நிலையில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடக்கும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவிற்கு கடைசி கட்ட நாமினிக்கள் பட்டியல் வெளியானது. அதை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் அந்த நாமினிகளை அறிவிக்கும் வீடியோவை அக்கடமி அவார்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
  • மேலும் வரலாற்றிலேயே முதன் முறையாக சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் Chloé Zhao and Emerald என்ற இரண்டு பெண்கள் ஆஸ்கர் விருதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categorized in: