படர்தாமரை எதனால் வருகிறது குணம் செய்ய என்ன செய்ய வேண்டும்..

படர்தாமரை எதனால் வருகிறது குணம் செய்ய என்ன செய்ய வேண்டும்..

படர்தாமரை என்பது பொதுவாக பெரியவர் மட்டும் சிறியவர்களுக்கு வரக்கூடிய தோல் நோய் அல்லது தொற்று நோய் என்றும் சொல்லலாம்…
இந்த நோயை ஆரம்பத்திலேயே சரி செய்தால் எந்த ஒரு பிரச்சினையும் வராது.. அப்படியே இந்த நோயை கண்டுக்காமல் இருந்தால் சரும தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும்..

சரி படர்தாமரை எதனால் வருகிறது? இதை சரி செய்ய இயற்கை மருந்து ஏதுவாக இருக்கிறதா? என்பதெல்லாம் இங்கு காண்போம்..

படர்தாமரை எதனால் வருகிறது?

ஃபங்கஸ் ‘ (Fungus) என அழைக்கப்படும் பூஞ்சை வகை நோய் தொற்று ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது.. அதாவது அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் சருமத்தின் இந்த தோல் நோய் உருவாகிறது..
உடல் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு உடல் எடை அதிக உள்ளவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மக்கள் அதிகம் வசிக்கும் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் உடல் வேர்வை அதிகம் வரும் அவர்கள் என பல காரணங்கள் இதற்கு இருக்கிறது இதனால் ஃபங்கஸ் என்னும் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றன…

படர்தாமரை குணம் செய்ய என்ன செய்ய வேண்டும்

பொதுவாக இந்த பூஞ்சைகள் மண்ணிலும், மனிதன் மற்றும் விலங்குகளின் வசிக்க கூட என்பதால் நாம் நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்..
தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
பிறகு சுத்தமான ஈரமில்லாத ஆடையை பயன்படுத்தி உடல் முழுவதும் துடைக்கவேண்டும்.. ஈரப்பதம் இல்லாத சுத்தமான ஆடையை அணிய வேண்டும்..

படர்தாமரை பரவும் இடங்கள்:

படர்தாமரை பரவும் இடங்கள் என்று பார்த்தால் அக்குள், பிறப்புறுப்பு,தொண்டை கால் நகங்கள், கழுத்து மடிப்புக்கள் தொடை இடுக்குகள், கால் இடுக்குகள், உடலில் இது போன்றஇடங்களை ஈரப்பதம்இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..

padarthamarai குணப்படுத்துவது எப்படி – padarthamarai best medicine in tamil

மிளகு ::

நம் வீட்டில் எளிதில் கிடைக்கும் மிளகு மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் படர் தாமரை இருக்கும் இடத்தில் அதை பூசி வைக்க வேண்டும் காலை எழுந்தவுடன் அதனை சீக்காய் பொடியைக் கொண்டு அதனை கழுவி விட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படர்தாமரை குறையும்..

See also  வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

அருகம்புல் :

அருகம்புல் மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர்தாமரை மறையும்..

பூவரசங்காய் :

பூவரசங் காய்யை உடைத்தால் அதில் மஞ்சள் நிறம் ஒரு திரவம் வெளியாகும் அதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல் மற்றும் படர்தாமரை குணமாகும்..

சந்தனம்:

எலுமிச்சை பழம் சாறு அதனுடன் சந்தன கட்டையை எடுத்து தேய்த்து பசையாக செய்துகொண்டு படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்..

குப்பைமேனி :

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் விட்டு அதில் ஒரு பங்கு குப்பைமேனி மற்றும் கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். சிறு தீயில் வைத்து தைல பதத்தில் காய்ச்சவும் ஆற வைத்து இதை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்…
குப்பைமேனி நுண்கிருமிகளை அளிக்கின்றது தோள்களுக்கு தொல்லைதரும் நோய்களை குப்பைமேனி ஒரு நல்ல மருந்தாக அமைகிறது….

கீழாநெல்லி:

கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது கீழாநெல்லியை அரைத்து அதனை பற்றுப் போட்டால் படர்தாமரை குணமாகும்….

பூண்டு :

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களைப் போட்டு தைல பதத்திற்கு காய்ச்சி எடுத்து தாமரை உள்ள இடத்தில் இதை காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு முறை பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் படர்தாமரை குணமாகும்…

தும்பை இலை :

தும்பை இலையை 2 ஸ்பூன் பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு ஒரு ஸ்பூன் திரிபால சூரணம் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் எடுத்து மூன்றையும் கலைக்கு படர்தாமரை உள்ள இடத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் படர்தாமரை குணமாகும்…

எனவே இயற்கை இம்முறையில் இவ்வகை தாவரங்களைக் கொண்டு நாம் இந்த படர்தாமரை குணமாகும்……