கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இப்போது நீங்கள் வெளியே செல்லும் போது ATM கார்டு, DEBIT கார்டு மற்றும் மொபைல் தேவை இல்லை. இனிமேல் பணம் செலுத்த கை கடிகாரம் இருந்தால் போதும் சுலபமாக பணம் செலுத்த முடியும்.

ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் இனிமேல் பணம் செலுத்தலாம். இப்போது இந்த முறையை Axis மற்றும் SBI வங்கி டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க wearable payment devices கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறை கை கடிகாரத்தில் ரூ.5000 வரை பணம் செலுத்தலாம்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்மார்ட் வாட்சின் உதவியுடன் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறை ஆப்ஷன் iPhone மற்றும் samsung ஆகியவற்றின் ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளது.

பொருட்களை வாங்கவோ அல்லது பெட்ரோல் போடவோ எதுவாக இருந்தாலும் ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் நீங்கள் பணம் செலுத்த முடியும்.

See also  உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா முதலிடம்!