வேர்க்கடலை உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது. இதற்கு பல பெயர்கள் உண்டு.அதாவது நிலக்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை,கடலை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அளித்துவரும் நொறுக்குதீனிகளான (ஜல்லி ,சிப்ஸ்,ஐஸ்) தவிர்த்து கடலைமிட்டாய்,எள்ளு மிட்டாய், பொறி உருண்டை போன்ற உடலுக்கு நம்மை தரும் பொருட்களை விரும்பி உண்ண ஊக்கம் அளிக்கவேண்டும்.

நிலக்கடைலையானது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்த ஒன்றாகும் . ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிடுவர் , பாதாம் பருப்பைவிட உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

நாம் நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பரிய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் அன்றாட வாழ்வில் மறந்து வருகிறோம். அந்த வரிசையில் வேர்க்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.

தற்போது மறந்துபோன நம் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், வேர்க்கடலை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேர்க்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் வேர்க்கடலையை பயன்படுத்துகிறோம். வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து கடலை மிட்டாய் தயாரிக்கப்படுக்கிறது. இந்த கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ் ஆக பயன்படுகிறது.

வேர்க்கடலையின் மகிமை தெரிந்த நாடுகளில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் வேர்க்கடலை இடம் பிடித்துள்ளது.

வேர்க்கடலை இந்தியாவில் தான் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கிறது. இங்கு வேர்க்கடலையின் மகிமை தெரியாமல் இதை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

அரைமணிநேரத்திக்கு முன்பாகவும் ,அல்லது பின்பாகவும் கடலையை ருசித்து வந்தால் உமிழ் நீர் அதிகமாக சுரக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கும்.

வேர்க்கடலையில் உள்ள சத்துகள்

வேர்க்கடலையில் புரோட்டின், கார்போஹைட்ரேட், கரையும் (நல்ல HDL) கொழுப்பு, வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம்,மாங்கனீஸ்,, துத்தநாகம், , பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றது.நிலக்கடலை என்பது அத்தியாவசியமான விதைகளில் ஒன்றாகும்.

வேர்க்கடலை தசைகளை வலிமையாக்கும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி தசைகளுக்கு வலிமையை தரவல்லது. மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏறுபடுத்தவல்லது. உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கு ஆற்றலை கொடுக்கவல்லது.

வேர்க்கடலை கொழுப்பைக் குறைக்கும்

கொழுப்புச் சத்து வேர்க்கடலை சாப்பிட்டால் அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். இதற்கு மாறாக வேர்க்கடலையில் மனிதனுக்கு நன்மை தரும் கொழுப்புசத்து தான் அதிகம் இருக்கிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotei- LDL) எனப்படும், கெட்ட கொழுப்புசத்தை குறைத்து நன்மை தரும் எச்.டி.எல். (High-density lipoprotein – HDL) கொழுப்பைசத்தை அதிகரிக்கிறது. மேலும் வேர்க்கடலை எலும்புகளுக்கு வலிமையை தரவும், இதயத்தை காக்கயும் பயன்படுத்தப்படுகிறது.

வேர்க்கடலையின் பயன்கள்

வேர்க்கடலையில் உள்ள டிரைட்டோபீன் என்ற அமினோ அமிலம் மனஅழுத்தத்தை குறைக்கவல்லது. நிலக்கடலையானது எலும்புக்கு வலிமையை தரவல்லது.

புரோட்டின் நிறைத்த வேர்கடலையானது உடலுக்கு ஏராளமான நன்மையை கொடுக்கவல்லது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்க,பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கவும் கடலை பயன்படுகிறது.

குழைந்தைகளின் நினைவாற்றலை அதிகரிருக்கவும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகின்றது. எனவே வேர்க்கடலை மிட்டாயை உணவில் அதிக அளவு எடுத்து கொள்வதன் மூலம் நமக்கு பல நன்மை கிடைக்கும்.