தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2021-2022 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான பாடத்தையும் தொடங்க உள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க உள்ளதாலும், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களை வழங்க வேண்டி உள்ளதாலும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.