Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலை:

  • நமது ஊரில் கோயில்களில் இவை வளர்க்கப்படுகிறது. இது உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, திருநீத்துபத்திரி என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் இனிப்பு சுவையுடையவை. இதுதான் சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.
  • அகத்திய முனிவர் திருநீற்றுப்பச்சிலை வாந்தி, கபநோய்களை குணப்படுத்துவதாக கூறியிருக்கிறார். விதைகள் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் இதன் செடிகள் கார்ப்பு சுவையை கொண்டிருக்க கூடும். இந்த திருநீற்றுப்பச்சிலை உடலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

​காய்ச்சலுக்கு திருநீர்ப்பச்சிலை:

  • காய்ச்சல் தீவிரமாக இருக்கும் போது உடலில் கெட்ட நீர் இருந்து உடலை கனமாக வைத்திருக்கும். இதன் முழுத்தாவரத்தையும் சுத்தம் செய்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறிவிடும். பிறகு உடல் கனமான உணர்விலிருந்து விடுபட்டு இலேசாக இருக்கும். உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்க்கலாம்.

​உஷ்ணம் சம்பந்தமான நோய் குறைய:

  • கோடையில் வயிற்று வலி, கண் எரிச்சல் சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகள் வரக்கூடும். இந்த உபாதைக்கு சிறந்த தீர்வாக திருநீற்றுப்பச்சிலை சப்ஜா விதைகள் உதவும்.
  • சப்ஜா விதைகளை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். இந்த பானம் சுவையாக இருக்கும். அதோடு வெயில் காலத்தில் மலச்சிக்கல் இல்லாமல் மலத்தை வெளியேற்றி நெகிழ்வாக வைத்திருக்கும்.

​வியர்வை வாடை போக:

  • உடலில் வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் வாசனை திரவியங்களை நாடுவோம். ஆனால் திருநீற்றுப்பச்சிலை இதற்கு தீர்வாக இருக்கும். வாசனை திரவியம், சோப்பு, ஷாம்புக்கள் எதுவும் இல்லாமல் திருநீற்றுப்பச்சிலை மட்டுமே கொண்டு சரிசெய்யலாம்.
  • குளிக்கும் நீரில் அரைமணி நேரத்துக்கு முன்பே கைப்பிடி இலைகளை எடுத்து நீரில் நனைத்து குளித்து வந்தால் உடல் நறுமணமாக இருக்கும். உடலை தூய்மையாக வைத்திருக்க செய்யும்.

​தலைவலி பிரச்சனைக்கு:

  • தலைவலி பிரச்சனை கொண்டிருக்கும் போது திருநீற்றுப்பச்சிலை இலையை அரைத்து பற்றுபோடலாம். ஆனால் இது கூட அவசியமில்லை. இலையை பறித்து உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி எடுத்து இலேசாக முகர்ந்து பார்த்தால் தலைவலி மறையக்கூடும். தூக்கமின்மை பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மூக்கு கோளாறுகள் சரியாக கூடும்.

​வாந்தியை தடுக்கும்:

  • கப வாந்தி பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் வாந்தியை குணப்படுத்த திருநீற்றுப்பச்சிலை உதவக்கூடும். இந்த பச்சிலையை அரைத்து சாறு எடுத்து சம அளவு வெந்நீர் கலந்து விடவும். இனிப்பு தேவையெனில் தேன் கலந்து குடிக்கலாம்.
  • சகல வியாதிக்கும் இது நல்ல மருந்தாக இருக்கும். நாள்பட்ட வாந்தி பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கூட திருநீற்றுப்பச்சிலையை எடுத்துகொண்டால் வாந்தி நிற்கும்.

​கண் கட்டி:

  • சிலருக்கு கண் இரைப்பையில் கட்டி உண்டாக கூடும். இது உஷ்ணகட்டியாக இருந்தாலும் பருக்களாக இருந்தாலும் அது உபாதையை உண்டு செய்யும். இதை போக்க திருநீற்றுப்பச்சிலையை மொத்தமாக அரைத்து கண்களின் மீது பற்று போடவும். சாறு உலர்ந்ததும் மீண்டும் கண் கட்டிகள் மீது மீண்டும் சாறு தடவி விடவும்.
  • தொடர்ந்து கட்டிகள் மீது பூசி வந்தால் கட்டிகள் அப்படியே அமுங்கிவிடும். சில நேரங்களில் பெரிதாகி கிளம்பாமல் அமுங்கிவிடும் சமயங்களில் உள்ளே சீழ் இருந்தால் அதை வெளியேற்றி சுத்தம் செய்யும். இந்த சாறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புண் ஆறிவிடும்.

​முகப்பரு, சரும நோய்களுக்கு திருநீற்றுப்பச்சிலை

  • பருக்கள் கடினமாக இருந்தால் அதை வடுக்கள் இல்லாமல் வெளியேற்ற திருநீற்றுப்பச்சிலை போதுமானது. முகப்பரு தீவிரமாக இருப்பவர்கள், திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு பொடியை கலந்து குழைத்து பருக்களில் பூசி வர முகப்பரு குணமாகும்.
  • தேமல், படை முதலிய சரும நோய்கள் இருந்தால் இதன் இலைச்சாற்றை மேற்கண்ட இடத்தில் பயன்படுத்தி வந்தால் இந்த படை நோய்கள் குணமாகும். விஷ ஜந்துக்கள் ஏதேனும் கடித்தால் அந்த இடத்தில் திருநீற்றுப்பச்சிலை சாறை சருமத்தில் பயன்படுத்தினால் விஷம் இறங்காது.

​காது கோளாறுகளுக்கு நன்மை செய்யும்:

  • காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் திருநீற்றுப்பச்சிலை இலையை எடுத்து சாறு பிழிந்து விடவும். இது காது வலியை குணமாக்கும். காதில் சீழ் வடிதலை நிறுத்தும். இந்த சாறை உணவில் கலந்து எடுத்துகொண்டால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும்
Previous Post
testro

டெஸ்டோஸ்டிரான் தமிழில்

Next Post
First word on cross

தமிழ் பைபிள் வார்த்தைகள்

Advertisement