பஜாஜ் நிறுவனம் புதியதாக இருசக்கர வாகனம் தயாரிக்கபடுவதாக உள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் (ktm)கேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. (DUKE )ட்யூக் மற்றும் (RC)ஆர்சி வகைக்கயிலான மோட்டர் சைக்கிள் தயாரிக்கப்படுகின்றன.

புதியதாக அறிமுகம் செய்ய இருக்கிற இருசக்கர வாகனங்களை பற்றி பார்ப்போம். மேற்குறிய வாகனங்களுடன் புதிதாக பஜாஜ் நிறுவன ஆலையில் கேடிஎம் நிறுவனத்தின் மோட்டர்சைக்கிள் அறிமுகமாக உள்ளது. பெயரிடப்படாத 500சிசி திறன் கொண்ட பைக்கே தயாரிக்க இருக்கிறது. கேடிஎம் நிறுவனம் இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பஜாஜ் நிறுவனம் அலையில் கேடிஎம்(KTM) வாகனங்கள் மட்டும் அல்லாமல் பிரிமியர் ரக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. பிரிமியர் ரக வாகனங்களுக்கு சொந்தக்காரர் ஹஸ்க்வர்னா(Husqvarana) ஆவர்.

கடந்த 2020 நவம்பரில் மட்டும் 8000 வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி உள்ளது. இது குறித்த தகவல்களை அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பஜாஜ் ஆர்&டி -யின் தலைமை அதிகாரி உறுதி செய்தார். 490சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் கொண்ட பைக்கை ஆஸ்திரியா நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

புதிய பைக்கின் உற்பத்தி பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால் விரைவில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வருவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. 500 சிசி திறன் கொண்ட பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வருவது உறுதியாகியுள்ளது.

புதியதாக தயாரிக்க உள்ள இருசக்கர வாகனம் என்ன வகையிலான சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளது என்ற தகவல் தெரியவில்லை. மேலும், 2022ம் ஆண்டிற்கு பின்னரே இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. புதிய பைக்கின் விலை மற்றும் அனைத்து தகவல்களும் அடுத்த ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

See also  மீண்டும் தெடர்கிறது விவசாயிகள் போராட்டம்......