விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 சுற்று பேச்சுவார்த்தைகளில் சுமுகமான தீர்வு எடுக்கப்படும் முடிவு என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற 8 வது சுற்று பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது.

விவசாயிகளுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைத்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மிகவும் வேதனை அளிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த 3 வேளாண் சட்டங்கள் சிறப்பானது என்று 1 மனுக்கள் கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று கடிந்து கொண்டார்.

இந்த போராட்டங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் வாழ்வு மற்றும் உடைமைகளை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் போராட்டத்தில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். போராட்டத்தில் ஒரு பகுதியாக முதியோர் மற்றும் பெண்கள் உள்ளனர்.

விவசாயிகளுடனான பேச்சு வார்த்தை நல்ல முடிவிற்கு வராத வேளாண் சட்டங்களை நிறுத்த நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரம் மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் உடனான 9 வது சுற்று பேச்சு வார்த்தை வரும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்று கூறினார்கள். மேலும் மிக பெரிய டிரக்ட்டர் பேரணியை குடியரசு தினத்தன்று நடத்தப்போவதாக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

See also  தமிழகத்தில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு