• நடிகை ஷாலினி முதலில் குழந்தை நட்சத்திரமாக  சினிமாவில்  அறிமுகமானார். இவர்  கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து நடிகை ஷாலினி மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
  •  மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படம்  தமிழில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.  இந்தப்படத்தை  இயக்குநர் ஃபாசில் இயக்கினார். இதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் ஷாலினி தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி  பெற்றதால் ஷாலினிக்கு வாய்ப்புகள் குவிந்தன.
  • அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். இதற்கிடையே 1999-ம் ஆண்டு இப்படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது.  மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘அலைபாயுதே’ படம் ஷாலினிக்கு இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்து முடித்த கையோடு 2000-ம் ஆண்டில் அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
  • திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த  ஷாலினி, 20 ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது மீண்டும் அவர் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குநர் மணிரத்னம் இயக்கும்   ” பொன்னியின் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும்  கூறப்படுகிறது. இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
See also  புல்வாமாவில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

Categorized in: