Author: Pradeepa

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி)சட்டமன்ற தொகுதியில் தற்போது அதிமுக மூத்த தலைவரும், சட்டமன்றத்தின் சபாநாயகருமான பி.தனபால் போட்டியிடுகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். இதனால் மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளோம். அவிநாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் ஆர்.அதியமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் ஏ.வெங்கடேஸ்வரன், அமமுக சார்பில் எஸ்.மீரா, நாம் தமிழர் சார்பில் ஷோபா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். அவிநாசி தொகுதி அன்னூர் ஒன்றியத்தில் உள்ள பசூரில் அதிமுக வேட்பாளர் தனபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்த்த மக்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு குறைகளை எடுத்துரைத்தனர். பல ஆண்டுகளாக எங்களுக்கு வீடு கட்டித்…

Read More

இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1636 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 633 ஆக பதிவாகியுள்ளது. தமிழக சுகாதார துறை மற்றும் குடும்ப நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் இன்றுவரை 1,90,11,118 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 80,634 மாதிரிகள் நேற்று அனுப்பப்பட்டது. மாநிலத்தில் 259 கொரோனா சோதனை செய்யும் மையங்கள் உள்ளன, அவற்றில் 69 அரசு மற்றும் 190 தனியார் மையங்கள் உள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக 40 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. ஏற்கனவே 12 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.…

Read More

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், முகவரி மட்டுமே இருக்கும் செல்போன் எண் இருக்காது. ஆதார் ஆணையத்திடம் இருந்து வாக்காளர்களின் செல்போன் விவரங்களை பெற்று வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வாங்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தடை விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி பிரச்சாரம் செய்யப்படுவது தொடர்பாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு…

Read More

வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். சிறுபான்மையின மக்களுக்குத் துரோகிகளாக இருக்கும் திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். திமுக ,அதிமுக போன்ற துரோகி கட்சிகள் ஒழிய வேண்டும். சமூக நீதி மற்றும் சம உரிமை என்ற கோட்பாட்டில் ஆட்சியை நடத்த மக்கள் வரும் தேர்தலில் எங்கள் கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் வரும் சட்டமன்ற…

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின் | # எஸ்.ஆர்.பிரபு | #ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் | #சுல்தான் official டிரெய்லர் | # ஜெய்சுல்தான் கார்த்தி, ராஷ்மிகமண்டன்னா, நெப்போலியன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்கியவர்: பக்கியராஜ் கண்ணன் தயாரிப்பு வீடு: ட்ரீம் வாரியர் படங்கள் தயாரிப்பாளர்கள்: எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு நிர்வாக தயாரிப்பாளர்: அரவேந்திராஜ் பாஸ்கரன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: தங்கப்பிரபஹரன் ஆர் DOP: சத்யன் சூரியன் இசை: விவேக் மெர்வின் ஆசிரியர்: ரூபன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன் உற்பத்தி கட்டுப்பாட்டாளர்: ராஜேந்திரன் பி.எஸ் உரையாடல்: அருள் குமார் ராஜசேகரன், ஹரிஹரசுதன் தங்கவேலு ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங், உத்தாரா மேனன் பாடல்:…

Read More

தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒருபுறம் அனைத்து கட்சியினரும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் அரசு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான வழிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும், மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read More

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைக்கும் நற்பணிக்கு உங்களது அனைவரின் உதவியும் தேவை என கூறினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்(MNM) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான் இங்கு அடிக்கடி வந்து கொண்டு தான் இருப்பேன். தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்புள்ளதால், வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும். நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறேன். நான் வேறு எந்த தொகுதிகளில் இருந்தாலும் மனம் இங்கு தான் உள்ளது. சட்ட மன்ற தேர்தலில் தொகுதிக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்து வருகிறோம். அதில், மக்களிடம் கேட்கப்படும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டங்களுக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நான் மட்டும் தனி நபராக செயல்பட முடியாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. நேர்மை என்பதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி…

Read More

திருவள்ளூர் மாவட்டம் அமமுக-தேமுதிக கூட்டணியில் திருத்தணி தேமுதிக தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார். திருத்தணி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக டீ போட்டும், வார சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்தும் பிரச்சாரம் செய்யும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில், தேமுதிக தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. பேட்டை பகுதியில் செவ்வாய்க் கிழமை வார சந்தை வழக்கமாக நடைபெறும். அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தைக்குச் சென்று தக்காளி வெங்காயம் காய்கறிகளை விற்பனை செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதற்கு பின் திருத்தணி பகுதியில் உள்ள டீ கடையில், டீ மாஸ்டராக டீ விற்பனை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டி, திருத்தணி பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Read More

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு போருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத்துறை செயலளர் சி.சமயமூர்த்தி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் சி.சமயமூர்த்தி, ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில், பொது மக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்து திரும்பிட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சேலம்,…

Read More

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டது.பழைய அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது முடக்கம் ஏற்படுமா, கட்டுப்பாடுகள் விதிகப்படுமா என்ற பயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து உயர் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற தீ விபத்தை தடுக்க ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதை தடை செய்துள்ளது. பயணிகள் இரவில் பயணிக்கும் போது செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் போட்டபடி வைத்து விட்டு தூங்கி விடுகிறார்கள் இதன் காரணமாக சூடாகி மீன் அழுத்தம் ஏற்பட்டு…

Read More

தமிழ் திரைப்படம்                       :  கர்ணன் மூவி Official டீஸர் நட்சத்திர நடிகர்கள்                     : தனுஷ், லால், யோகி பாபு, நடராஜ் (நாட்டி), ராஜிஷா விஜயன் இயக்குனர்                                  : மாரி செல்வராஜ் இசை அமைப்பாளர்                    : சந்தோஷ் நாராயணன் தயாரிப்பாளர்                             : கலாபுலி எஸ் தானு பேனர்                     …

Read More

மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்செந்தூர் (தூத்துக்குடி) 2, தென்காசி 1, மணிமுத்தாறு (திருநெல்வேலி)ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

Read More

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு பாதிப்புகள் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. மும்பை, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வரவல் அதிகரிப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் நரேந்திரமோடி கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தக் ஆலோசனை கூட்டத்தில் அடுத்த ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத்…

Read More

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்வுகள் ரத்து செய்வது குறித்து எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும் சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த…

Read More