Author: Pradeepa

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்படும் ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும் என்றார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என்று உறுதியளித்தார். அதற்கு பதிலாக ஜி.பி.எஸ் வழியாக கட்டண வசூலிக்கப்படும். ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் பணம் பெற்றுக்கொள்ளப்படும்.” என்றார். மேலும், “93 சதவீத வாகனங்கள் பாஸ்டேகைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துகிறார்கள். மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்திய பிறகும் பாஸ்டேகை எடுக்கவில்லை.” என்றார். இதுவரை பாஸ்டேக் எடுக்காத வாகனங்கள் குறித்து விசாரிக்க போலீசாருக்கு அறிவுறுத்தியதாக கூறினார். வாகனங்களில் பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றார். சுங்கச்சாவடிகளில் 2016 ஆம் ஆண்டு முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது கடந்த பிப்ரவரி16 முதல்…

Read More

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும் அனுமதி தராமலும் இடையூறு தமிழக அரசு செய்துவருவதாக MNM கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தங்கவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் சென்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தமிழக அரசு என்னுடைய பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும், அனுமதி தராமலும் இடையூறு செய்து வருவதாக கூறினார். கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகளை நான் சந்திக்க கூடாது என்று 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே மறைமுக உத்தரவை போட்டுள்ளது. எங்கள் கட்சி பொருளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதில் உள்நோக்கம் இருக்கலாம் என்று கூறினார். மக்கள் நீதி மய்யக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு வெளியிடலாம் என காத்திருந்தோம். ஏனெனில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கூறியவைகளை தற்போது…

Read More

சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற செய்தி பரவிக் வருகிறது. இந்த செய்திக்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இது ஆரம்ப கட்ட ஆலோசனை என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் செய்த பின்னரே ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை எண்ணை இணைத்துவிட்டால் தனிநபர் தகவல் திருட்டு, தேர்தல் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்துப் பேசிய ரவி ஷங்கர் பிரசாத், வாக்காளர் அடையாள அட்டையில் ஆதாரை இணைப்பது என்பது…

Read More

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே 761 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விரும்பும் தனியார் மருத்துவமனைகளில், இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி டோஸ் அளவுக்கு ஏற்றவாறு, நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும், மேலும் தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூடுதலாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானவர்கள்…

Read More

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் கமலஹாசன் , கஹால் அரகர்வால் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் இறந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது மேலும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பிறகு மற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கினாலும் இந்த படத்தின் படப்பிடுப்பு ஆரம்பமாகாமல் உள்ளது. தயாரிப்பு நிறுவனம், ஷங்கர், கமலஹாசன் ஆகியிருக்கு இடையில் கருது வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 சதவீத படப்பிடிப்பிற்கு 150 கோடி செலவு செய்துவிட்டார்களாம், மீதம் உள்ள படப்பிடிப்பிற்கு மேலும் 50 கோடி செலவு இருக்கிறது என்கிறார்கள். தற்போது கமலஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் இப்படத்தில் நடிப்பாரா அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் படப்பிடிப்பிற்கு செல்வாரா என்பது…

Read More

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் அணியுமாறும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பெண்ணின் திருமண உதவித்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்தார். 10 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தாலும், கருணாநிதி ஆட்சி காலத்தில் நாங்கள் செய்த சாதனைகள், திட்டங்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முதல்வர் பழனிசாமி பட்டியலிட முடியுமா?. தற்போது அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் பெரும்பாலானவை திமுக.,வின் அறிக்கையில் இருந்து காப்பி அடித்துள்ளனர். வாய்க்கு வந்தமாதிரி சில வாக்குறுதிகளை தந்துள்ளார். ஆனால், எது நடக்கும் எது நடக்காது என்ற உண்மை மக்களுக்கு தெரியும். 2016ஆம் ஆண்டு அதிமுக கூறிய வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது குறித்து முதல்வர் கூறுவாரா?. பொது இடங்களில் வைபை(wifi) வசதி, 10…

Read More

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்ஸி போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ஓலா நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஓலா நிறுவனம், நெதர்லாந்தில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வருகிறது, பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையும் அமைக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலை 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலில் உள்ள கிருஷ்ணகிரியில் வரும் என ஓலா நிறுவனம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலாவின் இ-ஸ்கூட்டர் ஆலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலைய மதிப்பிட்டின் விலை 2,400 கோடி ரூபாயாகும். இது ஆண்டுக்கு 1 கோர் அல்லது 10 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை கொண்டதாக இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ,ஈ.வி.க்களின் பயன்பாட்டை…

Read More

விஐய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற குக் வித் கோமாளி இனி ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த குக் வித் கோமாளி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தலைவராக செப் தாமு, செப் வெங்கடேஷன் மற்றும் இதை தொகுத்து வழங்க ரக்க்ஷன் ஆகியோர் இணைந்து நடித்தி வருகிறார். இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு அடுத்தப்படியாக அதிக பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிப்பராக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. இதன் டைட்டில் குக் வித் கிறுக்கு என்று தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. அதை போல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Read More

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 தலைப்புகள் உள்ள, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி கூறுகையில், ”காங்கிரசின் எண்ணங்களை, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம். இந்த அறிக்கையில் அரசு எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளும் உள்ளன,” என்று கூறினார். தேர்தல் அறிக்கை அரசின் சேவைகள் அனைத்தும், மொபைல் போன் வாயிலாக வழங்கப்பட்டு, பொது மக்கள், அரசு அலுவலகங்களில் காத்து கிடக்கிற சிரமங்களையும், காலதாமதம் ஆவது குறைக்கப்படும். தேர்தல் நடத்தப்படாத, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும். தமிழக்தில் திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே 74 சதவீதம் ஒதுக்க தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்க முனைவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதார தேவைகளை பூர்த்தி செய்ய,…

Read More

எழும்பூரில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மெதுவாக அதிகரித்து உள்ளது. பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க முடியும். மக்களிடையே அலட்சியம் இருந்து வருகிறது இதனால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுகிறது. திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், இறப்பு சடங்குகள், தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் நெருக்கமாக கலந்துகொள்கின்றனர். முகக் கவசம்(mask) அணிவதை தவிர்க்கிறார்கள். மக்கள் முக்கிய இடங்களுக்கு செல்லும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மயிலாப்பூர் வங்கி, வில்லிவாக்கம் விடுதி, தஞ்சை பள்ளி ஆகியவற்றில் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் கொரோனாவைரஸ் பரவியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக…

Read More

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 2 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடந்த முதல் செமஸ்டர் தேர்வில் 50,000-திற்கும் அதிகமானோர் ஆன்லைன் தேர்வு எழுதினர். அதேசமயம் சுமார் 60,000 மாணவர்கள் டிசம்பர் 21 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 10 ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களின் அரியர் தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளில் தங்களின் அரியர் தேர்வுகள் எழுதுவதற்காக சுமார் 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இருப்பினும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.…

Read More

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இதனால் ரஜினிகாந்த் தன்னை பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். உடல்நிலையை கருதி கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் கலந்துக்கொண்டார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். இந்தநிலையில் மீண்டும் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத் செல்வது ரஜினிகாந்துக்கு சிரமமாக உள்ளது என்று படக்குழுவினர் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். சென்னையில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.…

Read More

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் காட்சிகள் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் சட்ட மன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், 100 % வாக்குப்பதிவை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு சட்ட பேரவை பொது தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிக்கை உத்தரவிட்டுள்ளது. பொது…

Read More

இன்று விலை உயர்ந்து காணப்படும் வெங்காயாத்தில் இருக்கும் பல நன்மைகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெங்காயாம் அனைவரையும் அழ வைக்கும் ஆனால் அது நம் உடலுக்கும் சருமத்திற்கும் அழகூட்டும். இனி வெங்காயத்தோலை அனைவரும் குப்பையில் வீசாத்தீர்கள் அதில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள சாறு முடி உதிவை தடுக்கும் பிறகு முடி வளர்வதனை அதிகாரிக்கும். வெங்காயத்தோலை உபயோகித்தால் பிரகாசமான தோலை பெறலாம். வெங்காயத்தோலை பதப்படுத்தி வீட்டில் வளரும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். வெங்காயத்தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதை தண்ணீரில் கொதிக்கவைத்து கொப்பளிப்பதனால் குழந்தைகளின் தொண்டை வலி மற்றும் சளி நீங்கும். வெங்காயாத்தோலை தேநீரில் கொதிக்க வைத்து குடித்தால் முதியவர்க்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெங்காயத்தில் பிளாவனாய்டுகள் ,குர்செடின் ,பினோலிக் இவற்றை கொண்டதால் உடலின் ஏற்படும் வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்றவைற்றை தடுக்க பயனுள்ளதாக இருக்கும். வெங்கயாத்தை சாப்பிட்டால் உடம்பு சூட்டை தனிக்கும்,கோடைகாலத்தில் அனைவர்க்கும் வரும்…

Read More