பாதாம் பருப்பு நன்மைகள் – badam benefits in tamil

இயற்கையில் விளையும் எல்லா பருப்புகளும் நமக்கு தெரியும் அதில் ஒன்றுதான் பாதாம்பருப்பு இதில் எண்ணிலடங்காத பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த பாதாம் பருப்பை உண்பதால் ஏற்படும் நன்மைகள் இங்கே பார்ப்போம்..

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை

இதயம்:

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது இதனால் பாதாமில் தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு இல்லை.. இப் பருப்பினை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு குறைகிறது..

ஆண்மை குறைவு

இன்று பல ஆண்கள் ஆண்மை குறைவால் அவதிப்படுகின்றனர்.
பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் நரம்புகள் வலுவடையும்.. உயிர் அணுக்கள் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை நீங்கும் மற்றும் ஆண்மைகுறைவு குறைபாடுகள் நீங்கும்.

ரத்தம் :

உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்தால் ரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்கள் இருக்க வேண்டும்.
பாதாம் பருப்பில் ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள் பெருக்கும் சக்தி அதிகமாக உள்ளது எனவே பாதாம் தினமும் உட்கொண்டால் நன்மை கிடைக்கும்..

மலச்சிக்கல் :

உடல் நலத்திற்கு உணவாக நார்ச்சத்து மிக குறைந்த உணவை அதிகம் உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.. எனவே பாதாம் பருப்பில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகமாக உள்ளதால் அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகள் நீங்கும்..

தோல்

நமது உடலை வெளிப்புறம் காக்கும் கவசமாக நமது வெளிப்புறத் தோல் அமைந்துள்ளது..பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.

உடல் சக்தி

பாதாம் பருப்பில் அதிக அளவு புரத மற்றும் வைட்டமின்கள் சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை அதிக அளவு உட்கொண்டால் எலும்பு நரம்புகள், தசைகள் வலுப்பெறும். இவை உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது..

கர்ப்பம்

பெண்கள் கருவுற்ற காலத்தில் மிக சத்தான உணவு உண்பது மிக அவசியம் அதிலும் பாதாம் பருப்பு சரியான அளவு விகிதத்தில் உட்கொண்டால் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கு நன்மை கிடைக்கும்.

தலைமுடி :

பாதாம் பருப்பில் கேரட்டின் மற்றும் மெலனின் புரதங்கள் அதிகளவு உள்ளன.
எனவே பாதாம்பருப்பை உட்கொண்டு வந்தால் தலைமுடி உதிர்வை தடுக்கலாம். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும்.

உடல் எடை பாதாம் பருப்பில் கெட்ட கொழுப்பு அதிகம் இல்லாததால் உடலை குறைக்க நினைப்பவர்கள் பட்டினியாக இருப்பதை தவிர்த்து உணவிற்கு இடையே பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலின் நோயெதிர்ப்பு வேதிப் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளது.
பாதாம் பருப்பை அதிகம் உண்டால் அதில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும் வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..