நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும்மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 14) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

See also  9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Categorized in: