- சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- மேலும் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

