• அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளார்.
  • மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக புதிய கல்விக் கொள்கையில் புதிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. இது கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் . மருத்துவப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று கூறியிருந்தார்கள்.
  • இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் உயிர் விலங்கியல், நுண்ணறிவியல்,உயிர் வேதியியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கி உள்ளார்கள். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
  • இந்நிலையில் மத்திய அரசு அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் நுழைவுத்தேர்வு கட்டாயம் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.
  • தற்போது கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று மாணவர்களும், கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
  • இதனால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் விகிதம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.