எட்டுத்தொகை நூல்கள்

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

  • தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும்

அகம் சார்ந்த நூல்கள்

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. அகநானூறு
4. ஐங்குறுநூறு
5. கலித்தொகை
என்ற ஐந்துமாகும்.

புறம் சார்ந்த நூல்கள்

1. புறநானூறு
2. பதிற்றுப்பத்து

அகமும் புறமும் சார்ந்த நூல்

1. பரிபாடல்

  • இனி ஒவ்வொரு எட்டுத்தொகை நூல்களின் அமைப்பும் சிறப்பும் பற்றி விரிவாக காண்போம்.

நற்றிணை

  • அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110, 379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)
என்னும் அடிகள் காட்டுகின்றன.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

  • என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.
    ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் இன்னொரு புலவர்.

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)

குறுந்தொகை

  • குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
See also  தொல்காப்பியம்

செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே (40)
(புலம் = நிலம்)

  • தன் காதலனாகிய கடுவனை இழந்த பெண் குரங்கு, தன் இளங்குட்டியைத் தன் இனத்திடம் விட்டு, மலையிலிருந்து வீழ்ந்து உயிர் துறத்தலை ஒரு புலவர் காட்டுகின்றார்.
  • இது முருகவேள் வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள் கிடைக்கவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

ஐங்குறுநூறு

  • இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.
  • மருதம் – ஓரம்போகியார்
    நெய்தல் – அம்மூவனார்
    குறிஞ்சி – கபிலர்
    பாலை – ஓதலாந்தையார்
    முல்லை – பேயனார்
  • இதில் பல புதுமைகள் உண்டு. இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி அந்தாதியாகவுள்ளது. மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் தொடர்ச்சியாக உள்ளன. இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும் போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும். ‘வாழி ஆதன் வாழி அவினி!’ என்ற அடி பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காண்க.

  • ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.

அகநானூறு

  • இது 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் (66)

(இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் = பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

  • என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.
  • தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86, 136 ஆகிய செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன.

இசை

  • இந்நூலின் 82, 111, 352, 301 ஆகிய பாடல்கள் பண்டைத் தமிழிசையைப் பற்றி அறிய உதவுகின்றன. 352ஆம் செய்யுள் இசை இலக்கணத்தைக் குறிப்பிடுகின்றது.
See also  அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிக்கலாம்

இதிகாசச் செய்திகள்

  • சேதுக்கரையில் ஓர் ஆல மரத்தடியில், கடல் கடந்து இலங்கைக்குச் செல்வது பற்றிய ஆலோசனையில் இராமன் ஆழ்ந்திருந்த போது, ஆலமரத்திலிருந்து பறவைகள் ஒலி எழுப்பி இடையூறு செய்தன. அப்போது இராமன் தலைநிமிர்ந்து பார்த்த பார்வையில் அவை ஒலி அடங்கின. தலைவியின் திருமணச் செய்தி அறிந்த அலர்தூற்றுவோர் அடங்கிப் போயினர் என்பதை உணர்த்தத் தோழி இராமனது நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறாள். கம்பர் காப்பியத்தில் கூட இல்லாத இச்செய்தியை அகநானூறு (70) கூறுகிறது. கண்ணபிரான் கோபியர் தழை உடுத்திக் கொள்ளுதற்கு ஏற்ப மரத்தின் கிளையை மிதித்த செய்தி ஒருபாட்டில் காணப்படுகிறது. (59)

 கலித்தொகை

  • கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.
  • பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.
  • இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 – 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது.
  • பாட்டின் எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பாலை – பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி – கபிலர்
மருதம் – மருதன் இளநாகனார்
முல்லை – சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் – நல்லந்துவனார்

  • நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

புறநானூறு:

  • புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)

நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (186)

See also  B.ed, M.ed படிப்பிக்கான தேர்வு ஜூன் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா (192)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (195)

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55)
அது சிவ வணக்கமாகும்.

  • இதற்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர் 157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

பதிற்றுப் பத்து

  • பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.
  • இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.

பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன

Categorized in: