தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டுக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்ய உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செயப்பட்டது. தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தால் திரும்ப பெற்றுக்கொள்ளாம் என்று அறிவித்து இருந்தது. அரியர் தேர்வுகளை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனு தாக்கல் செய்துனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது, முதல் விசாரணையில் பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுதும் உள்ள கல்லுாரிகளில், எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்; எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கிடையில், யு.ஜி.சி., மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், எந்த வழியில் அரியர் தேர்வுகளை நடத்தலாம் என்பதை ஆலோசித்து, பரிந்துரைக்க வேண்டும்.

உயர் படிப்பில் சேர்வதற்கு தகுதியில்லாத மாணவர்களை தகுதி பெற்றவர்களாக சான்றிதழ் அளிக்க முடியாது. கல்வி முறையின் புனிதத்தில் சமரசம் மேற்கொள்ளாமல், மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு அரசு மற்றும் யு.ஜி.சி., கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு(ஏப்ரல் 15 ஆம் தேதி) தள்ளி வைத்தது.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள், ஆன்லைன் மூலம் நடத்தப்படும். தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது. மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தது. 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

See also  திருக்குறள் 20 தமிழில்

Categorized in: