Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:-

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

நூல்வகைகள்:

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:

“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

  • இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  • இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  • கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  • களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  • ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  • ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  • திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  • திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  • முப்பால் (திருக்குறள்)
  • திரிகடுகம்
  • ஆசாரக் கோவை
  • பழமொழி
  • சிறுபஞ்சமூலம்
  • கைந்நிலை
  • முதுமொழிக் காஞ்சி
  • ஏலாதி
  • இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.

வாய்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு

  • இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
  • இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும்
    இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். “இன்னிலை” நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
  • “கைந்நிலை” என்ற நூலை இயற்றியவர் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
    இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னிலை, கைந்நிலை வேறுபாடு

வேறுபாடு இன்னிலை கைந்நிலை
பொருள் புறம் அகம்
ஆசிரியர் பொய்கையார் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்
பாடல்கள் 45 60

பகுப்பு:

  • இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பன்னிரண்டு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஐந்து நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

நீதி நூல்கள்:

  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • ஏலாதி
  • பழமொழி நானூறு
  • ஆசாரக்கோவை
  • சிறுபஞ்சமூலம்
  • முதுமொழிக்காஞ்சி
  • அகத்திணை நூல்கள்
  • ஐந்திணை ஐம்பது
  • திணைமொழி ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமாலை நூற்றைம்பது
  • கார் நாற்பது
  • கைந்நிலை
  • புறத்திணை நூல்
  • களவழி நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

வரிசைஎண் நூல்பெயர் பாடல் எண்ணிக்கை பொருள் ஆசிரியர்
1. நாலடியார் 400 அறம்/நீதி சமண முனிவர்கள்
2. நான்மணிக்கடிகை 101 அறம்/நீதி விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது 40+1 அறம்/நீதி கபிலர்
4. இனியவை நாற்பது 40+1 அறம்/நீதி பூதஞ்சேந்தனார்
5. திருக்குறள் 1330 அறம்/நீதி திருவள்ளுவர்
6. திரிகடுகம் 100 அறம்/நீதி நல்லாதனார்
7. ஏலாதி 80 அறம்/நீதி கணிமேதாவியார்
8. பழமொழி நானூறு 400 அறம்/நீதி முன்றுரை அரையனார்
9. ஆசாரக்கோவை 100+1 அறம்/நீதி பெருவாயின் முள்ளியார்
10. சிறுபஞ்சமூலம் 104 அறம்/நீதி காரியாசான்
11 முதுமொழிக்காஞ்சி 10*10 அறம்/நீதி கூடலூர்க்கிழார்
12. ஐந்திணை ஐம்பது 50 அகம் பொறையனார்
13. ஐந்திணை எழுபது 70 அகம் மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது 50 அகம் கண்ணன் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது 150 அகம் கணிமேதையார்
16. கைந்நிலை 60 அகம்  புல்லங்காடனார்
17. கார்நாற்பது 40 அகம் கண்ணங் கூத்தனார்
18. களவழி நாற்பது 40+1 புறம் பொய்கையார்

 

Share: