தமிழ்நாடு மாநில வாரியம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மே 3 ஆம் தேதி தொடங்கும். தேர்வு மே 21 அன்று முடிவடையும். புதன்கிழமை அரசு தேர்வு இயக்குநரகம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு அட்டவணையை அறிவித்தது.

இந்த ஆண்டு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வர உள்ளனர். வழக்கமாக, தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கும். இந்த ஆண்டு,பொது தேர்வுகள் இரண்டு மாதங்கள் தாமதமாகும்.

தேர்வு 10 முதல் 1.15 வரை நடத்தப்படும். வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடம் கொடுக்கப்படும் பின்னர் அவர்களின் விவரங்களை சரிபார்க்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள்வழங்கப்படும்.

மே 3-ஆம் தேதி – மொழிப்பாடம்

மே 5-ஆம் தேதி- ஆங்கிலம்

மே 7-ஆம் தேதி – கணினி அறிவியல்

மே 7-ஆம் தேதி – கணினி அறிவியல்

மே 11-ஆம் தேதி – இயற்பியல், பொருளாதாரம்

மே 17-ஆம்தேதி- கணிதம், விலங்கியல்

மே 19-ஆம் தேதி- உயிரியல், வரலாறு

மே 21-ஆம் தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்