Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் தனியார் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ PSLV C-51:

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு சாதனையாக கருதும் PSLV C-51 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தனியார் துறை மூலம் வடிவமைத்த செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்காக இஸ்ரோ கருதுகின்ற சிறந்த இதிட்டத்தின் செயற்கைகோளானது விண்ணில் ஏவப்படும்.

PSLV C-51 ராக்கெட்டினை கொண்டு பூமி கண்காணிப்புக்காக ஆனந்த், சாடிஷ் சாட் மற்றும் யூனிட் சாட் என்ற செயற்கைக்கோள்கள் பல்கலைக்கழக கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. மேலும் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோளும் அனுப்பப்படுகிறது. இதன் மூலமாக தனியார் விண்வெளி துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கும் வகையில் இருக்கின்றது.

மேலும் நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக சந்திராயன்-3 செயற்கைகோள் மூலமாக ஒரு லேண்டர், ரோவர் கருவி மற்றும் உந்துவிசை கருவியும் சேர்த்து விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான குழுவும் உருவாக்கப்பட்டு மத்திய அரசு முறையான அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share: