தமிழ் அம்மா கவிதைகள்

அம்மா

  • முதலில் நான் பேசி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    முதலில் நான் எழுதி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    …::அம்மா::…

பொக்கிஷம்

  • அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
    தொலைந்து போன பின் தேடாதே.
    அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
    அன்னையின் அன்பு…!

உறவுகள்

  • பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
    பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
    கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
    கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

அன்புக்கு இணை ஏதும் இல்லை

  • தன் உடல் மூலம் உடல் தந்து,
    உதிரத்தை உணவாக தந்து,
    உயிருக்கு உணர்வுகளையும்
    தந்தவள் தாய்…!
    உன் போல் யாரும் இல்லை.
    உன் அன்புக்கு இணை ஏதும் இல்லை.

தாய்க்கு மகிழ்ச்சி

  • கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டால்
    மனைவிக்கு மகிழ்ச்சி…!
    என்ன வேண்டும் என்று கேட்டாலே
    போதும் தாய்க்கு மகிழ்ச்சி…!

அகிலமே போற்றும்

  • அள்ள அள்ள குறையாதது எது..?
    அமுதசுரபியா..?
    இல்லை, அகிலமே போற்றும்
    “அம்மாவின் அன்பு”.

அன்பு என்றாலே

  • ஆயிரம் முறை காயப்படுத்தினாலும்
    திரும்பி ஒரு முறை கூட
    காயப்படுத்தாத உறவு அம்மா…!
    அன்பு என்றாலே அம்மா தான்…!

ஒரே கடவுள்

  • செய்த குற்றங்கள் அனைத்தையும்
    மன்னிக்கும் ஒரே கடவுள்.
    அம்மா…!

மூன்றெழுத்தே

  • அம்மாவுக்கு என்று
    தனியாக கவிதை வேண்டாம்.
    அம்மா என்ற மூன்றெழுத்தே கவிதை தான்.
    அன்பாக பழகிப்பார் அம்மாவும் கவிதை தான்.!

தமிழ் தாய்

  • கவிதை எழுதுவது
    பெண்ணுக்காக அல்ல.
    என் தமிழுக்காக,
    என் தமிழ் தாய்க்காக
    ”தமிழ் தாய்”
    அவளும் பெண் தானே…!
0 Shares:
You May Also Like
Read More

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை…
Tamil Life Quotes
Read More

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள்

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள் : வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கையின் பொருள்,…
uyir natpu kavithai in tamil
Read More

உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

uyir natpu kavithai in tamil – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முறையும், நட்பின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகிறது. நட்பு என்பது நம்மை ஒருவருக்கொருவர்…
தமிழ் ஒரு வரி கவிதைகள்
Read More

தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால்…